அடையக் கடவேம் என்று,
கடைப்பிடித்து - உறுதியாகக்கொண்டு, உள்ளம்
தேறா - சிந்தை தெளிந்து எ - று.
அறைந்திட
என்பதில் இடு, துணைவிளை. புகழமை என்பதில், மை :
பகுதிப்பொருள் விகுதி. அந்த வடநூல் எனவும், இந்தப் பிறப்பில் எனவும்
கூட்டுக. செய்தி : முன்னிலையேவலொருமை யெதிர்கால வினைமுற்று; இதில்
த் எழுத்துப் பேறு. தேறா : செங்யயா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். (24)
திருநகர்
தீர்த்த மூர்த்திச் சிறப்புமூன் றந்த மூர்த்தி
அருள்விளை யாட லெட்டெட் டருச்சனை வினையொன் றாக
வரன்முறை யறுபத் தெட்டா மற்றவை படல மாக
விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்ப லுற்றேன். |
(இ
- ள்.)
திருநகர் தீர்த்தம் மூர்த்திச் சிறப்பு மூன்று - தலவிசேடம்
தீர்த்தவிசேடம் மூர்த்திவிசேடம் என மூன்றும், அந்த மூர்த்தி -
அப்பெருமை பொருந்திய சோமசுந்தரக் கடவுள் அருள் விளையாடல்
எட்டெட்டு - அருளினாற் புரிந்த திருவிளையாடல்கள் அறுபத்துநான்கும்,
அருச்சனை வினை ஒன்று -அருச்சித்த செயல் ஒன்றும், ஆக அறுபத்தெட்டு
ஆம் அவை - ஆக அறுபத்டெ்டாகிய அவைகளை, வரன்முறை -
முறைப்படியே, படலம் ஆக - படலங்களாக அமைத்து, விரிமுறை -
விரிந்தமுறையில், விருத்தச் செய்யுள்வகைமையால் - விருத்தமாகிய
செய்யுள்வகையினால், விளம்பல் உற்றேன் - கூறத் தொடங்கினேன் எ - று.
சிறப்பு
என்பதனைத் திருநகர், தீர்த்தம் என்பவற்றோடும் ஒட்டுக.
அறுபத்தெட்டு என்று கூறினும், தலவிசேடத்தின் முற்படக் கூறிய
பகுதிகளையும் சேர்த்தெண்ணிக் கொள்க, மற்று : அசை. விருத்தம் என்பது
கலித்துறை முதலியவற்றையும் குறிக்கும்; திருவிருத்தம் என்னும் வழக்கும்
ஓர்க. வகைமை, மை : பகுதிப்பொருள் விகுதி. மேற்பாட்டில் பெறுதும்
என்று பன்மையாற் கூறியது சார்புடை யாரையும் உளப்படுத்தி. இவை மூன்று
பாட்டும் குளகம். (25)
அவையடக்கம்
|
நாயகன்
கலிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேயவத் தலத்தி னோர்க்கென் வெள்ளறி வுரையிற் குற்றம்*
ஆயுமா றரிதன் றேனு நீர்பிரித் தன்ன முண்ணுந்
தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரிதந் தன்னை. |
(இ
- ள்.)
நாயகன் - முற்றறிவுடையனாகிய சிவபிரானின், கவிக்கும்
- திருப்பாசுரத்திற்கும், குற்றம் நாட்டிய - குற்றங்கூறி நிறுத்திய, கழகமாந்தர்
- சங்கப்புலவர்கள், மேய - பொருந்தியிருக்கப்பெற்ற, அத்தலத்தினோர்க்கு -
அந்த மதுரைமாநகரில் வசிப்போர்க்கு, என்வெள் அறிவு உரையில் - என்
வெண்மையான அறிவு பற்றிவந்த சொற்களில், குற்றம் ஆயுமாறு -
குற்றங்காணும் வழி. அரிது அன்றேனும் - அருமையுடைத்தன்றாயினும்,
(பா
- ம்.) * வெள்ளறிவுரை சொற்குற்றம்.
|