ஆய வேலையின் மன்னவ னாணையா லமைச்சர்
மேய வேலவர் துறைதுறை மேவினர் விடுப்பப்
பாய வேலையி னார்த்தனர் வழிக்கொடு படர்ந்தார்
சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள். |
(இ
- ள்.) ஆய வேலையின் - அப்போது, மன்னவன் ஆணையால்
- அரசன் ஆணையினால், அமைச்சர் - மந்திரிகள், மேய ஏவலர் -
அங்குள்ள ஏவலாட்களை, துறை துறை மேவினர் விடுப்ப - பல
இடங்களிலும் செல்லுமாறு அனுப்ப, சேய காடு எறிந்து - நீண்ட காட்டினை
அழித்து, அணிநகர் செய் தொழில் மாக்கள் அழகிய நகரமாகுமாறு செய்யும்
வினைஞர்கள், பாய வேலையின் ஆர்த்தனர் - பரந்த கடல் போல ஒலித்து,
வழிக்கொடு படர்ந்தார் - வழிக்கொண்டு வந்தார்கள் எ - று.
ஆய
- ஆகிய : சுட்டு. மேய - அருகில் மேவிய. மேவினர் விடுப்ப
- மேவினராகுமாறு விடுப்ப; சென்று கொணருமாறு விடுப்ப. அங்ஙனஞ்
சென்றவர்களாற் செலுத்தப்பட்டு என்பது தொக்கு நின்றது. சேய -
சேய்மையுடைய. (26)
வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்குய நவியம்
இட்ட தோளினர் யாப்புடைக் கச்சின ரிரும்பின்
விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன்றோல்
தொட்ட காலினர் வனமெறி தொழிலின ரானார். |
(இ
- ள்.) இரும்பின் கார் ஒளி விட்ட மெய்யினர் - இரும்பின்
ஒளிபோலும் கரிய ஒளி வீசும் உடலினையுடைய வினைஞர்கள், வட்ட வாய்
- வட்டமாகிய இடத்தினையுடைய, மதிப் பிளவின் - சந்திரனது பிளவு
போலும், வெள் வாய்க்குயம் - வெள்ளிய வாயினையுடைய கொடு வாளையும்,
நவியம் - கோடரியையும், இட்ட தோளினர் - வைத்த
தோளினையுடையவராய், யாப்பு உடைக் கச்சினர் - அரையிற் கட்டிய
கச்சினையுடையவராய், வார் விசிகொள் வன் தோல் தொட்ட காலினர் -
வாராற் கட்டிய வலிய செருப்புத் தொடுத்த காலினையுடைய வராய், வனம்
எறி தொழிலினர் ஆனார் - காடு வெட்டும் தொழிலை யுடையவராயினார்கள்
எ - று.
குயம்
- வளைந்த வாள்; யாப்பு - இறுகப் பிணித்தல். வீசி - கட்டுதல் :
முதனிலைத் தொழிற்பெயர். தொட்ட - தொடுத்த; தொடு தோல் என்பதுங்
காண்க. (27)
மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
எறியு மோதையு மெறிபவ ரோதையு மிரங்கி
முறியு மோதையு முறிந்துவீ ழோதையு முகில்வாய்ச்
செறியு மோதையுங் கீழ்ப்பட மேற்படச் செறியும். |
(இ
- ள்.) மறியும் ஓதை வண்டு அரற்றிட - (போய்) மீளும்
ஒலியையுடைய வண்டுகள் ஒலிக்கவும், மரம் தலை பனிப்ப - மரங்கள்
தலை நடுங்கவும், எறியும் ஓதையும் - வெட்டுகின்ற ஓசையும், எறிபவர்
ஓதையும் -
|