I


திருநகரங்கண்ட படலம்291



வெட்டுகின்றவர்களின் ஓசையும், இரங்கி முறியும் ஓதையும் - ஒலித்து
முறிகின்ற ஓசையும், முறிந்து வீழ் ஓதையும் - முறிந்து கீழே விழுகின்ற
ஓசையும் (ஒன்றாகி), முகில் வாய்ச் செறியும் ஓதையும் கீழப்பட - முகிலின்
கண் மிக்க இடி ஓசையும் கிழ்ப்பட, மேற்படச் செறியும் - மேற்பட்டு
ஒலிக்கும் எ - று.

     மறியும் ஓதை, வண்டுக்கு அடை. இரங்கி - கலங்கி, மேற்பட -
மேற்பட்டு. (28)

ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொளித்து
வெளிறில் வன்மரஞ் சினையிற வீழ்வசெங் களத்துப்
பிளிறு வாயவாய் நிணத்தொடு குருதிநீர் பெருகக்
களிறு கோடிற மாய்ந்துவழ் காட்சிய வனைய.

     (இ - ள்.) வெளிறு இல் - வெள்ளடை யில்லாத (சேகு ஏறிய) வல்
மரம் - வலிய மரங்கள், ஒளிறு தாதொடு - விளங்கா நின்ற மகரந்தத்தோடு,
போது - மலர்களும், செந்தேன் - சிவந்த தேனும், உக - சிந்த, ஒலித்துச்
சினை இற வீழ்வ - ஒலி செய்து கிளைகள் முறிய வீழ்கின்ற தோற்றம், களிறு
- யானைகள், செங்களத்து - போர்க்களத்தில், பிளிறு வாயவாய் -
ஒலிக்கின்ற வாயினையுடையவாய், நிணத்தொடு குருதிநீர் பெருக -
நிணத்துடன் உதிரம் பெருக, கோடு இற மாய்ந்து வீழ் காட்டிசய அனைய -
கொம்புகள் முறிய இறந்து விழும் தோற்றத்தைப் போல்வன எ - று.

     வெளிறு - வயிரி மின்மை; வெள்ளடை யென வழங்கும். வீழ்வ :
தொழிற் பெயர். தாதுடன் கூடிய போதுக்கு நிணமும், தேனுக்குக் குருதியும்,
கிளைக்கு யானைக் கோடும், மரம் ஒலித்தலுக்கு யானை பிளிறுதலும், மரம்
வீழ்தலுக்கு யானை வீழ்தலும் உவமம், காட்சிய, அ : அசை. (29)

பூவ டைந்தவண் டினமயற் புறவொடும் பழனக்
காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து
மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்.

     (இ - ள்.) பூ அடைந்த வண்டு இனம் - மலர்களிற் பொருந்திய
வண்டுக் கூட்டங்கள், அயல் புறவொடும் பழனக் கா அடைந்தன -
பக்கத்திலுள்ள முல்லை நிலங்களிலும் மருத நிலங்களின் சோலைகளிலும்
சென்று சேர்ந்தன; பறவை வான் கற்பகம் அடைந்த - பறவைகள் உயர்ந்த
கற்பக மரங்களிற் சென்று தங்கின; கோ அடைந்திட - பெரு வேந்தர்கள்
வர, ஒதுங்குறும் குறும்பு போல் நீங்குகின்ற குறுநில மன்னரைப் போல, மா
மாடு உள வரைகளும் காடும் செறிந்து அடைந்தன - விலங்குகள்
பக்கத்திலுள்ள காடுகளிலும் மலைகளிலும் நெருங்கிச் சேர்ந்தன எ - று.

     பறவைகள் கற்பகம அடைந்தனவென வனத்தின் உயர்ச்சி கூறினார்.
கோ - பெருவேந்து. குறும்பு - குறுநிலம் ஆளுவது : சொல்லால் அஃறிணை,
பொருளால் உணர்திணை; அவர் மலையினும் காட்டினும் வாழ்வ ரென்க. (30)