I


திருநகரங்கண்ட படலம்295



      [எழுசீரடியாசிரியவிருத்தம்]
மறைபயில் பதும மண்டப மருத்த
     மண்டப மழைநுழை வளைவாய்க்
பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற்
     பீடிகை திசையெலாம் பிளக்கும்
பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள்
     பன்மணி மண்டபம் வேள்வித்
துளைபயில் சாலை திருமடைப் பள்ளி
     சூழுறை தேவர்தங் கோயில்.

     (இ - ள்.) மறைபயில் பதும மண்டபம் - வேதம் ஓதும் பதும
மண்டபமும், அருத்த மண்டபம் - அருத்த மண்டபமும், மழை நுழை -
முகிலில் நுழைகின்ற, வளைவாய் - வளைந்த வாயினையுடைய, பிறை பயில்
சினைமா மண்டபம் - பிறைமதி தவழும் முடியினையுடைய மகா மண்டபமும்,
அறுகால் பீடிகை - அறுகாற் பீடமும், திசை எலாம் பிளக்கும் - திசை
அனைத்தையும் பிளக்கின்ற ஒலியையுடைய, பறை பயில் நிருத்த மண்டபம்
- இயங்கள் இரட்டுகின்ற நிருத்த மண்டபமும், விழாக்கொள் - இறைவன்
திருவிழாக் கோலங்கொண்டருளும், பல் மணி மண்டபம் - பல மணிக
ளழுத்திய மண்டபமும், வேள்வித் துறை பயில்சாலை - பல துறைகளை
யுடைய வேள்விகள் செய்யும் யாக சாலைகளும், திருமடைப்பள்ளி -
திருமடைப்பள்ளியும், சூழ் உறை தேவர் தம் கோயில் - சுற்றிலும் வசிக்கும்
பரிவார தெய்வங்களின் கோயில்களும் எ - று.

     மழை நுழையும்படி உயர்ந்த மண்டபம் எனினுமாம். பிளப்பது போலும்
ஒலி. சூழ் - சூழ. தேவர் - கணபதி, கந்தர், சண்டேசர் முதலாயினார். (37)

வலவயி னிமய வல்லிபொற் கோயின்
     மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா
     னிலாவிரி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற்
     கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற்
     றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்.

     (இ - ள்.) வலவயின் - இறைவன் வலப்பாகத்தில், அமயவல்லி பொன்
கோயில் - இமயக்கொடியாகிய அங்கயற்கண்ணம்மைக்குப் பொன்னாலாகிய
திருக்கோயிலும், மாளிகை அடுக்கிய மதில் - திரு மாளிகை வரிசையை
யுடைய திருமதில்களும், வான் நிலவிய கொடி - ஆகாயத்தை அளாவிய
கொடிகளையும், நெடிய சூளிகைய - நீட் இறப்புக்களையுமுடைய, வால்
நிலாவிரி தவள மாளிகை - வெள்ளிய நிலாவை விரிக்கின்ற தவள