அருந்தவ ரிருக்கை யந்தண ருறையு
ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால்
பெருங்குடி யேனைய கரிதேர்
திருந்திய பரிமா நிலைக்களங் கழகந்
தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை
யினையன பிறவுநன் கமைத்தான். |
(இ
- ள்.) அருந்தவர் இருக்கை - அரிய முனிவர்கள் தங்கும்
மடங்களும், அந்தணர் உறையுள் - மறையவர் வசிக்கும் வீடுகளும், அரசர்
ஆவணம் - அரசர் வீதிகளும், குல வணிகப் பெருந்தெரு - சிறந்த
வணிகரின் பெரிய வீதிகளும், பேர் அறம் சால் - பெரிய அறம் நிறைந்த,
நல்வேளாளர் பெருங்குடி - நல்ல வேளாளர்களின் பெரிய குடிகள் நிறைந்த
வீதிகளும், ஏனைய - மற்ற, கரி தேர் திருந்திய பரிமா - யானைகள் தேர்கள்
இலக்கணமமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், நிலைக்களம் - தங்கு
மிடஙகளும், கழகம் - கல்விச் சாலைகளும், ஆறு தீம் சுவை நான்கு உண்டி
- இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை,
இரந்தவர்க்கு அருந்தும் நல் அறச்சாலை - வறியராய் இரந்தவருக்கு ஊட்டும்
நல்ல தரும சத்திரங்களும். இனையன பிறவும் - இன்னும் அவை போல்வன
பிறவும், நன்கு அமைத்தான் - நன்றாகச் செய்தான் எ - று.
அருந்தவர்
- துறவோர், சிவனடியார்; ஆவணம், வீதி யென்னுந்
துணையாய் நின்றது. குடி - குடியிருக்குமிடம். ஏனைய - இவையொழிந்த.
கழகம் - கற்குமிடம்; நூலாராயுமிடம், வாது புரியுமிடம் முதலியன. நான்கு
உண்டி - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. (40)
துணிகயங்
கீழ்நீர்க் கூவல்பூ வோடை
தொடுகுளம் பொய்கைநந் தவனந்
திணிமலர்ச் சோலை துடவையுய் யானந்
திருநகர்க் கணிபெறச் செய்து
மணிமலாத் தாரோன் மாளிகை தனக்கம்
மாநகர் வடகுண பாற்கண்
டணிநகர் சாந்தி செய்வது குறித்தா
னண்ணலா ரறிந்திது* செய்வார். |
(இ
- ள்.) துணிகயம் - தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழ்
நீர்க் கூவல் - கீழே நீரையுடைய கிணறுகளும், பூ ஓடை - மலரோ
டைகளும், தொடு குளம் - தோண்டப்பட்ட பெரிய குளங்களும், பொய்கை
- பொய்கைகளும், நந்தவனம் - நந்தவனங்களும், திணி மலர்ச் சோலை -
நெருங்கிய மலர்களையுடைய சோலைகளும், துடவை - தோட்டங்களும்,
(பா
- ம்.) * அறிந்தது.
|