பொன்மய மான சடைமதிக் கலையின்
புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தார்ச்
சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ்
சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா
நகரென வுரைத்தனர் நாமம். |
உய்யானம் - உத்தியானங்களும்
ஆகிய இவைகளை, திரு நகர்க்கு
அணிபெறச் செய்து - செல்வ நிறைந்த நகரத்திற்கு அழகு பொருந்த
அமைத்து, மணி மலர்த் தாரோன் - அழகிய மலர்களாலாகிய மாலையை
அணிந்த பாண்டியன். தனக்கு மாளிகை அ மாநகர் வட குணபால் கண்டு -
தனக்கு அரண்மனை அந்தத் திருநகருக்கு வட கீழ்த் திசையில் அமைத்து,
அணிநகர் சாந்தி செய்வது குறித்தான் - அழகிய அந் நகருக்குச் சாந்தி
செய்தலைக் கருதினான்; அண்ணலார் அறிந்து இது செய்வார் - சோமசுந்தரக்
கடவுள் அதனை அறிந்து இதனைச் செய்வாராயினர் எ - று.
துணி
- தெளிந்த; துணிநீர் மெல்லவல் என்னும் மதுரைக்காஞ்சி
யின் உரையை நோக்குக. கீழ்நீர்க் கூவல் - சுரப்புநீர்க் கேணியுமாம். (41)
(இ
- ள்.) பொன்மயமான சடைமதிக் கலையின் - பொன்மயமாகிய
தமது சடையிலுள்ள சந்திரகலையின், புது அமுது உகுத்தனர் - திய
அமுதத்தைச் சிந்தினர்; அதுபோய் - அவ்வமுதஞ் சென்று, சின்மயமான தம்
அடி அடைந்தார் - ஞானமயமாகிய அவ்விறைவருடைய திருவடிகள் தம்மை
அடைந்தவரை, சிவமயம் ஆக்கிய செயல்போல் - சிவ மயமாகச் செய்த
செய்கையைப்போல, தன்மயம் ஆக்கி - தனது (அமிர்த)மயமாக்கி, அ
நகர்முழுதும் சாந்திசெய்தது - அந்நகர் முழுதையும் தூய்மைசெய்தது; அது
நல்மதுரமயம் ஆனதன்மையால் - அவ்வமுதம் நல்ல மதுரமயமாகிய
தன்மையினால் (அந்நகருக்கு), மதுராநகர் என நாமம் உரைத்தனர் - மதுரை
மாநகர் எனப்பெயர் கூறினார் எ - று.
சந்திரனிடத்து
அமிழத முண்டென்பர். சின்மயம - ஞானமயம். அடியை
யடைந்தவரை அவர் சிவமயமாக்கிய செயல்போல் எனலுமாம். சாந்திசெய்தல்
வாலாமை நீக்கித் தூய்மை செய்தல். (42)
கீட்டிசைக்
கரிய சாத்தனுந் தென்சார்
கீற்றுவெண் பிறை* நுதற் களிற்றுக்
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங்
குடவயின் மதுமடை புடைக்குந் |
(பா
- ம்.) * கீற்றிளம் பிறை.
|