தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித்
தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ
ணீலியுங் காவலா நிறுவி. |
(இ
- ள்.) கீழ்திசை கரிய சாத்தனும் - கிழக்குத்திக்கில் கரிய
நிறமுடைய ஐயனாரையும், தென்சார் - தென் திக்கில், கீற்று வெண் பிறை
நுதல் - கீற்றாகிய வெள்ளிய பிறையை ஒத்த நெற்றியினையும், களிற்றுக்
கோட்டு - யானையின் கொம்பு போன்ற, இளம் களபக் கொங்கை -
இளமையாகிய சாந்தணிந்த கொங்கைகளையுமுடைய, அன்னையரும் - சத்த
மாதரையும், குடவயின் - மேற்குத் திசையில், மதுமடை உடைக்கும் தோட்டு
- தேன் மடை யுடைத்தோடா நின்ற இதழ்களையுடைய, இளந்தண்ணம்
துழாய் அணி - பசுமையாகிய குளிர்ந்ததுழாய்மாலையை அணிந்த, மௌலித்
தோன்றலும் - முடியினையுடைய திருமாலையும், வடவயின் - வடதிசையில்,
தோடுநீடு இரும்போந்தின் நிமிர்குழல் - மடல் நீண்ட பெரிய பனையின்
மலரணிந்த நிமிர்ந்த கூந்தலையும், எண்தோள் - எட்டுத் தோள்களையு
முடைய, நீலியும் - காளியையும், காவலாநிறுவி - நகரத்திற்குக் காவலாக
நிறுத்தி எ - று.
கீழ்த்திசை
கீட்டிசை யென்றாயது மரூஉ. அன்னையர் - எழுமாதர்;
பிராமி, நாராயணி, உருத்திராணி, மகேசுவரி, வராகி, கௌமாரி, இந்திராணி
என்போர். மடை யுடைந்தாற்போலப் பாயுமென்க. இளமை - பசுமை.
தண்ணம், அம் : சாரியை. நீட்டு : விகாரம் ஆக வென்பது குறைந்து நின்றது.
(43)
கைவரை யெருத்திற் கனவரை கிடந்த
காட்சியிற் பொலிந்தொளிர் கோயின்
மைவரை மிடற்று மதுரைநா யகரை
மரபுளி யருச்சனை புரிவான்
பொய்வரை மறையா கமநெறி யொழுகும்
புண்ணிய முனிவரை யாதி
சைவரைக் காசிப் பதியினிற் கொணர்ந்து
தலத்தினிற் றாபனஞ் செய்தான். |
(இ
- ள்.) கைவரை எருத்தில் - யானையின் பிடரியில், கனவரை
கிடந்த காட்சியில் - பொன் மலை தங்கிய தோற்றம் போல், பொலிந்து
ஒளிர் கோயில் - பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய,
மைவரை மிடற்று மதுரை நாயகரை - கருமை தாங்கிய திரு மிடற்றினை
யுடைய மதுரை நாயகரை, மரபுளி அருச்சனை புரிவான் - விதிப்படி
பூசிப்பதற்கு, பொய்வரை - பொய்ம்மை நீக்குகின்ற, மறை ஆகமநெறி
ஒழுகும் - வேதாகமவழியில் ஒழுகாநின்ற, புண்ணிய முனிவரை ஆதி
சைவரை - அறவுருவுடைய முனிவர்களையும் ஆதி சைவர்களையும்,
காசிப்பதியினில் கொணர்ந்து - காசியென்னும் திருப்பதியினின்றும்
கொண்டுவந்து, தலத்தினில் தாபனம் செய்தான் - அப்பதியில்
நிலைபெறுத்தினான் எ - று.
|