காட்சிக் கெளியனாதலும்
கடுஞ்சொல்ல னல்லனாதலும் அடங்க இனியன்
என்றார்;
"காட்சிக் கெளியன்
கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்" |
என்பது தமிழ்மறை.
கடல்போல் அளவிடப் படாதனவாகிய இரு
மொழிகளையும் முற்றவும் கற்றவனென்றார்;
"தென்சொற்
கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்" |
எனக் கம்பர்
இராமனைக் கூறுவது இங்கு நோக்கற் பாலது. (2)
வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வார்கள் பதி னாயிரிவ ருள்ளான்
வானொழுகு பானுவ வந்தொழுகு சூர
சேனன்மகன் காஞ்சனையை மன்றல்வினை செய்தான். |
(இ
- ள்.) வேனில் விறல் வேள்வடிவன் - வேனிற்காலத்து
வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; வேட்கை விளை
பூமி ஆன - காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய, மடவார்கள் பதினாயிரவர்
உள்ளான் - காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வான் ஒழுகு
- வானிற் செல்லாநின்ற, பானுவழி வந்து - சூரியன் மரபில் தோன்றி, ஒழுகு
சூரசேனன் - அத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, மகள் காஞ்சனையை
மன்றல் வினைசெய்தான் - புதல்வியாகிய காஞ்சனமாலையை
மணஞ்செய்தவன் எ - று.
காமுகரை
வெல்லுமென்க. வேனிலுக்குரிய வெற்றியையுடைய வேல்
என விரித்தலுமாம். வேட்கை - காமம்;
"ஊரவர் கௌவை
யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்" |
என்பதனாலும் காமம்
பயிராத லுணர்க. இன்பம் விளைகின் : ஏகதேவ
வுருவகம். பானுவழி யென்றமையாற் சோழனென்று கொள்க. (3)
கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில்பல நாண்மக விலாவறுமை யெய்திப்
பண்ணரிய தானதரு மம்பவு மாற்றிப்
புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றன் |
(இ
- ள்.) கண் நுதலை - சோமசுந்தரக் கடவுளை, முப்பொழுதும்
வந்து பணி கற்றோன் - மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக்
கற்றவன்;எண் இல் பலநாள் - அறவிறந்த பல நாட்கள் வரை, மகவு இலா
வறுமை எய்தி - பிள்ளைப் பேறு இன்மையால் வறுமையை அடைந்து
(அதனையொழிக்க), பண் அரிய தான தருமம் பலவும் ஆற்றி - செய்தற்கு
அரிய பல தானங்களையும் தருமங்களையும் செய்து, புண்ணியம் நிரம்பு
பரிவேள்வி புரிகுற்றான் - அறம் நிரம்பிய அசுவ மேதம் செய்யலுற்றான்
எ - று.
|