கண்ணுதல்
: நுதலில் நாட்ட முடையோ னெனக் காரணக்குறி. பணி -
பணிதல் : முதனிலைத் தொழிற்பெயர். நூலறிவிற்குப் பயன் வாலறிவனது
நற்றாள் தொழலாகலின் பணிதல் கற்றானென்றார். மகவில்லாமையை வறுமை
யென்றார்;
"பெறுமவற்றுள்
யாமறிவ தில்லை யவிறிந்த
மக்கட்பே றல்ல பிற" |
என்பவாகலின். (4)
ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நூறுமக மும்புரியி னென்பதனொ டிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும். |
(இ
- ள்.) ஈறு இல் மறை கூறும் முறை - அழிவில்லாத மறைகள்
கூறிய முறையை, எண்ணி - ஆராய்ந்து (அதன்படி) ஒரு தொண்ணூற்று
ஆறினொடு மூன்று மகம் ஆற்ற தொண்ணூற்றொன்பது வேள்விகளைச்
செய்ய, அமரேசன் - தேவேந்திரனானவன், நூறு மகமும் புரியின் - நூறு
வேள்விகளையும் செய்து முடிப்பானாயின், நொடிப்பில் என் பதம் மாறும்
என - நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி, மற்று
அதனை மாற்றி அது சாற்றும் - அவ் வேள்வியை விலக்கி இதனைக்
கூறுகின்றான் எ - று.
முறையாலே
எண்ணிச் செய்ய எனினுமாம். ஒரு, வழக்கு நோக்கியது.
பரிவேள்வி நூறு புரிந்தவன் இந்திரனாவன்; சதமகன் என்னும் பெயரும் அது
பற்றியது. நொடிப்பு : தொழிற்பெயர்; நொடித்தற்கண்; நொடியின் பின்
என்றுமாம். மற்று : வினைமாற்று. (5)
நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரர் நாடன்
தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான். |
(இ
- ள்) நன்பொருள் விரும்பினை - நல்ல மகப்பேற்றை
விரும்பினாய்; அதற்கு இசைய - அவ்விருப்பத்திற்குப் பொருந்த, ஞாலம்
இன்பு உறு மகப் பெறும் மகத்தினை - உலகம் இன்பத்தை யடையும்
மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை, இயற்றின் - செய்தாயானால், அன்பு
உறு மகப் பெறுதி என்று - அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி,
அமரர் நாடன் - தேவேந்திரன், தன்புலம் அடைந்திடலும் - தனது
நாட்டினை யடைந்தவுடனே, நிம்பம் நகுதாரான் - வேப்ப மலர் விளங்கும்
மாலையையுடைய பாண்டியன் எ - று.
தம்பொரு
ளென்பதம் மக்கள் என்பதனால் பிள்ளையைப் பொரு
ளென்றார். சிந்தாமணியில் நன்பொருள்
என்றும், திருத்தாண்டகத்துள்
ஒண்பொருள் என்றும் புதல்வன் கூறப்படுதலுங் காண்க. மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது என்பவாகலின், ஞாலமின் புறு மகவென்றார்.
|