I


306திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மகப்பெறு மகம் - புத்திரகாமேஷ்டி. நகு நிம்பத் தாரான் என மாற்றுதலுமாம்.
(6)
மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி
அக்கண மதற்குரிய யாவையு மமைத்துத்
தக்கநிய மத்துரிய தேவியோடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுரி கிற்பான்.

     (இ - ள்.) மிக்க மக வேள்வி செய் விருப்பு உடையனாகி - நல மிக்க
மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அக்கணம் அதற்கு உரிய
யாவையும் அமைத்து - அப்பொகுதே அவ்வேள்விக்கு வேண்டும்
பொருள்களனைத்தையும் சேர்த்து, தக்க நியமத்து - தகுந்த நியமத்துடன்,
உரிய தேவியோடு சாலை புக்கனன் இருந்து - உரிய மனைவியோடு
வேள்விச்சாலையிற் சென்றிருந்து, மகவேள்வி புரிகிற்பான் - மகப்பேற்று
வேள்வியைச் செய்யத் தொடங்கினான் எ - று.

     நியமம் - கடன்; முறைமை. உரியதேவி - யாகபத்தினி யாதற் குரிய
மா தேவி. புக்கனன் : முற்றெச்சம். (7)

ஆசறு*ம றைப்புலவ ராசிரியர் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஓசையனு தாத்தசொரி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந்+தெரி வளர்ப்பான்.

     (இ - ள்.) ஆசு அறும் மறைப்புலவர் ஆசிரியர் - குற்றமற்ற வேதநூற்
புலமையுடையவராகிய குரவர், காட்டும் மாசு அறு சடங்கின் வழி -
காட்டுகின்ற குற்றமற்ற கரணத்தின் வழியே, மந்திரம் - மந்திரங்களை,
உதாத்தம் அனுதாத்தம் சொரிதம் ஓசை தழுவ ஓதி - எடுத்தல் படுத்தல்
நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சரித்து, வாசவன் இருக்கையில் இருந்து
எரி வளர்ப்பான் - (திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை
வளர்ப்பானாயினன் எ - று.

     புலவரும் ஆசிரியரும் என்றுமாம். உதாத்தம் - எடுத்தல், அனு தாத்தம்
- படுத்தல், சொரிதம் - நலிதல். இந்திரனுக் கிருப்பிடம் கீழ்த் திசை யாகலின்
அதனை வாசவனிருக்கை யென்றார். (8)

விசும்புநில னுந்திசையும் வேள்வியடு சாலைப்
பசும்புகை படர்ந்தொரு படாமென மறைப்பத்
தசும்புபடு நெய்பொரி சமித்தினொடு வானோர்க்
கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான்.

     (இ - ள்.) வேள்வி அடுசாலைப் பசும் புகை - வேள்விபுரிகின்ற
சாலையினின் றெழுந்த பசிய புகையானது, விசும்பும் நிலனும் திசையும்
படர்ந்து - வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு படாம் என
மறைப்ப - ஒரு போர்வைபோல மறைக்க, தசும்பு படு நெய் பொரி