I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்307



சமித்தினொடு - குடத்திலுள்ள நெய் பொரி சமித்துக்களால், வானோர்க்கு
அசும்புபடும் இன் அமுதின் - தேவர்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய
அமுதம்போல, ஆகுதி மடுத்தான் - ஆகுதி செய்தான் எ - று.

     நெய்யாலும் பொரியாலும் சமித்தாலும். ஒடு ; கருவிப் பொருட்டு;
எண்ணொடுவாக்கி ஐயுருபு விரித்து ஆகுதியாகக் கொடுத்தான் என
முடித்தலுமாம். சமித்து - ஓம விறகு; அத்தி, அரசு, பலரசு, வன்னி முதலியன.
(9)

ஐம்முக னனாதிபர மாத்தனுரை யாற்றால்
நெய்ம்முக நிறைத்தழ னிமிர்த்துவரு* மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடர் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண.

     (இ - ள்.) ஐம்முகன் அனாதி பரமாத்தன் - ஐந்து திருமுகங்களை
யுடையவனும் அனாதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெருமானுடைய,
உரை ஆற்றால் - திருவாக்காகிய மறை வழிப்படி, நெய் முகம் நிறைத்து -
நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, அழல் நிமிர்த்து வரும் எல்லை -
தீயை வளர்த்து வரும்பொழுது, பைமுக அரா அணி பரஞ்சுடர் தனிப்ப -
படத்தைத் தன்னிடத்துடைய பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும்,
மைமுக நெடுங்கண் இமவான் மனைவி நாண - மைதீட்டிய
இடத்தினையுடைய நீண்ட கண்களையுடைய மலையரசன் மனைவியாகிய
மேனை நாணுறவும் எ - று.

     ஐந்து முகங்கள் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தி
யோசாதம் என்பன. ஆத்தன் - உண்மையுரைப்போன், தோழன்; பரம
ஆத்தன் - மேலாகிய ஆப்தன்; கடவுள். நிமிர்ந்து என்பது பாடமாயின்
நிறைத்து என்பதை நிறைக்க வெனத திரித்துரைக்க. இது முதல் பத்துச்
செய்யுட்களால் திருவவதாரத்தின் சிறப்பைக் கூறுகின்றார். (10)

வள்ளன்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிர் தீம்பால்
வெள்ளமொழு கக்கரிய வேற்கணிட னாட.

     (இ - ள்) வள்ளல் மலயத்துவச மீனவன் - வள்ளலாகிய மல யத்துவச
பாண்டியனது, வலத்தோள் துள்ள - வலத்தோள் துடிக்கவும், மனை
காஞ்சனை சுருங்கிய மருங்குல் தள்ள - (அவன்) மனைவியாகிய
காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, எழு கொங்கைகள் ததும்ப
நிமிர் தீம்பால் வெள்ளம் ஒழுக - பருத்தெழுந்த கொங்கைகளினின்றும்
தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், கரியவேல் இடக்கண்
ஆட - அவளது வேல்போன்ற கரிய இடதுகண் துடிக்கவும் எ - று.


     (பா - ம்.) * நிமிர்ந்துவரும்.