I


308திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     தோள், கண் முதலியவை ஆடவர்க்கு வலமும், பெண்டிர்க்கு இடமும்
துடிப்பின் நலமுண்டாகும்; மாறித் துடிப்பின் தீங்குண்டாகும். அன்பினால்
கொங்கை பூரித்துப் பால் சுரக்கும் என்க. (11)

இவ்வுலக மன்றியுல கேழுமகிழ வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஒளவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புல னிசைப்ப.

     (இ - ள்.) இவ்வுலகம் அன்றி - இந்த நிலவுலகத்திலுள்ளாரே
யல்லாமல், ஏழு உலகும் மகிழ்வு எய்த - ஏழு உலகங்களிலுள்ளவர்களும்
மகிழ்ச்சியடையவும், தவத்துறை சைவமுதலாயின நிவப்ப - தவநெறியாகிய
சைவமுதலிய அகச் சமயங்கள் மேலோங்கவும், ஒளவியம் மறம் கெட -
பொறாமை முதலிய பாவங்கள் ஒழியவும், அறம் குதுகலிப்ப - அறமானது
களி கூரவும், தெய்வமறை துந்துபி - தெய்வத்தன்மையையுடைய மறைகளும்
வேத துந்துபிகளும்; திசைப்புலன் இசைப்ப - திசையிடங்க ளனைத்திலும்
ஒலிக்கவும் எ - று.

     அகச்சமயம் - சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வைரவம்,
வாமம் என்பன; பிறவா றுரைத்தல் அமையுமாயினுங் கொள்க. ஒளவியத்தால்
விளையும் மறங்கெட எனினுமாம். (12)

மைம்மலர் நெடுங்கணர மங்கையர் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபட லின்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப.

     (இ - ள்.) மை மலர் நெடுங்கண் - மை தீட்டிய மலர்ோன்ற நெடிய
கண்களையுடைய, அரமங்கையர் நடிப்ப - அரம்பையர் கூத்த யரவும், அ
மதுரை மாநகர் உளார் - அந்த மதுரையாகிய பெரிய நகரத்திலுள்ளவர்கள்,
மெய் மனம் மொழி செயலின் வேறுபட லின்றி - உடல் உள்ளம் உரையாகிய
மூன்றின் செயலினாலும் வேறு படாது, தம்மை அறியாதன - தம்மை
அறியாமைக்குக் காரணமாகிய, அகமகிழ்ச்சி - உள்ளக் களிப்பு தலைத்தலை
சிறப்ப மேலும் மேலும் ஓங்கப் பெறவும் எ - று.

     மைம்மலர் என்பதற்கு மை பரந்த என்றும், நீலோற்பல மலரென்றும்
பொருள் கூறலுமாம், மெய்ம்மையாகிய மனமொழி செயல் என விரிப்பினும்
அமையும்; மூன்று கரணங்களும் ஒற்று மைப்பட வென்க. நகருளார் மகிழச்சி
சிறக்கப் பெற. (13)

மாந்தர்பயில் மூவறுசொன் மாநில வரைப்பில்
தீந்தமிழ வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்ந்ததமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தர்களின் மீனவர்* விழுத்தகைமை யெய்த.

     (பா - ம்.) * மீனவன்.