(இ
- ள்.) மாந்தர் பயில் மூவறு சொல் மாநில வரைப்பில் - மக்கள்
வழங்குகின்ற பதினெட்டு மொழிகளுள்ள பெரிய நிலவுலகத்தில், தீந்தமிழ்
வழங்கு திருநாடு சிறப்ப - இனிய தமிழ் மொழி வழங்குகின்ற அழகிய நாடு
சிறந்து ஓங்கவும், ஆய்ந்த தமிழ் நாடு - சங்கமிருந்து ஆராய்ந்த அத்
தமிழ்நாட்டின் மண்டலங்களை, அரசு அளித்து முறை செய்யும் - அரசாண்டு
நீதி செலுத்துகின்ற, வேந்தர்களில் - மன்னர்களில், மீனவர் விழுத்தகைமை
எய்த - பாண்டியர்கள் சிறந்த பெருமையைப் பெறவும் எ - று.
மாந்தர்
பயிலாத நிலமு முண்டாகலின் பயில் என்றார். பதினெண்
மொழி முன்பு உரைக்கப்பட்டன. தமிழகத்திற்குத் திருநாடு என்பதும் ஒரு
பெயர் போலும். அது : பகுதிப்பொருள் விகுதி. வேந்தர்கள் - சேர,
பாண்டிய, சோழர்கள். திருத்தொண்டர் புராணத்துள் திருஞானவம்பந்தரின்
திருவவதாரம் கூறும் வழி திசை யனைத்தின் பெருமையெலாம் தென்றிசையே
வென்றேற என்பது முதலாகக் கூறியுள்ளன இங்கு நோக்கற் பாலன. (14)
நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவி* ழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன. |
(இ
- ள்.) அழல் எரிக் கடவுள் - தீக் கடவுள், நோற்ற பயன்
நொய்து எய்த - தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும், கொய்
தளிரென - கொய்யப்பட்ட தளிர்போல், தழல் கொழுந்து படு குண்டத்து -
நெருப்புக் கொழுந்து விட்டேரிகின்ற வேள்விக் குண்டத்தின்கண்; ஐது
அவிழ் இதழ் கமலம் - அழகியதாக விரிந்த இதழ் களையுடைய தாமலை
மலர், அப்பொழுது அலர்ந்து - அப்போதே விரியப்பெற்று, ஓர் மொய்
தளிர் விரைக்கொடி - நெருங்கிய தளிர் களையுடைய மணமுள்ள ஒரு
கொடியானது, முளைத்து எழுவது என்ன - தோன்றி மேலெழுவதைப்
போலவும் எ - று.
நொய்து
- விரைய. அழல் எரி, ஒரு பொருளன. கொய்தளிர்
குழைவுக்கும் நிறத்துக்கும் உவமை. ஐது - அழகிது; நுண்ணிதுமாம். ஐதவழ்
என்னும் பாடத்திற்கு அழகு தவழும் என வுரைக்க. அலர்ந்த என்னும்
பெயரெச்சம் ஈறு தொக்கதுமாம். இச்செய்யுளின் மூன்றாமடி முதல் குழவியின்
எழிலும் தோற்றமும் கூறுகின்றார். (15)
விட்டிலகு
சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்சிரண மொப்ப. |
(இ
- ள்.) விட்டு இலகு சூழியம் விழுங்கு - ஒளிவிட்டு விளங்கா
நின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறு கொண்டை - சிறிய
கொண்டையானது, வட்டம் மதிவாய் - வட்டமாகிய சந்திரனிடத்துள்ள,
(பா
- ம்.) * ஐதவழ்.
|