I


கடவுள் வாழ்த்து31



நலம் இலேன் புன்சொல் - (அக்கல்வி கேள்வி) நலம் இல்லாத என்னுடைய
புன்மையான சொற்களிலுள்ள, துகள் அறுத்து - குற்றங்களைப் போக்கி,
ஆலவாய் உடைய நாயனார்க்கு - திருவாலவாயையுடைய சிவபிரானுக்கு,
இனிய ஆக்குப - இனியதாகச் செய்வர் எ - று.

     வாரி, நீருக்கு ஆகுபெயர். கார் ஆக்கியவென என்று பிரித்துக்
கூட்டப்பட்டது. கேள்வியர் - புலமையர் என்றுமாம். நாயனார் - தலைவர்.
(28)

அல்லை யீதல்லை யீதென மறைகளு மன்மைச்
சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற்
கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனைச்*
கொல்லு வேனெனு மாசையென் சொல்வாழி கேளா.

     (இ - ள்.) அல்லையீது அல்லையீது என - இஃது
அல்லையாயிருக்கின்றாய் இஃது அல்லையாயிருக்கின்றாய் என்று,
மறைகளும் - வேதங்களும், அன்மைச் சொல்லினால் - எதிர்மறைச்
சொல்லினால், துதித்து இளைக்கும் - துதித்து மெலிவதற்குக் காரணமாயுள்ள,
இச்சுந்தரன் ஆடற்கு - இந்தச் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலைக்
கூறுதற்று, என் உரை எல்லையாகுமோ - என்மொழி வரம்பு ஆகுமோ,
(ஆகாது எனினும்) இதனை சொல்லுவேன் எனும் ஆசை - இத்திரு
விளையாடலைக் கூறுவேன் என மனத்திலெழுந்த விருப்பம், என் சொல்வதி
கேளா - நான் கூறும் வழியைக் கேட்கின்றிலது, என் செய்கு - என்
செய்வேன் எ - று.

     ஈது எனச் சுட்டுப்பெயர் நீண்டது. அல்லை : முன்னிலையொருமை
எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. உம்மை : உயர்வு சிறப்பு. இளைக்கு
மென்றார் காணலாகாமையால். இளைக்கும் என்னும் பெயரெச்சம் சுந்தரன்
என்னும் கருவிப்பெயர் கொண்டது. இகரச் சுட்டு உயர்வின் மேலது.
ஆடற்கு - ஆடலைக் கூறுதற்கு. ஆடற்கு உரை எல்லையாகுமோ என்றது,
ஆடல் என் உரை வரம்பில் அடங்காது என்றபடி. ஓ இரண்டனுள் முன்னது
வினா; பின்னது அசை நிலை. செய்கு : தன்மை யொருமை யெதிர்கால
வினைமுற்று. கேளாறு என்னும் துவ்வீறு தொக்கது. ஆசை மிகுதியாற்
சொல்லலுற்றேன் என்றார்.

     மறைகள் அன்மைச் சொல்லினாற் கூறி இளைத்தலை இவ்வாசிரியரே.

"பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ள மதியின்
பேதங் களல்ல விவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல்
வேதங் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற்
பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே"

என, இப்புராணத்துள் பின்னரும் கூறுதல் காண்க. இவை நான்கு பாட்டும்
அவையடக்கம். அவையடக்கமாவது இன்னதென்பதனை,


     (பா - ம்.) * என்செய்கே னிதனைச் சொல்லுகேனெனு மாசை.