I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்311



ஓட்டி, சிறுதோள் வருடி ஆட - சிறிய தோள்களைத் தடவி அசையவும்
எ - று.

     துகிலின் புறமெனல் பொருந்தாமை காண்க. மேகலை - என கோவை
யுடையது. பொன் மேகலையெனக் கூட்டுக. (18)

தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரு மெவ்வுலகு மீன்றாள்.

     (இ - ள்.) தெள் அமுதம் - தெளிந்த அமுதம் போன்ற, மெல் மழலை
சிந்த - மெல்லிய மழலைுச் சொற்கள் தோன்றவும், இளமூரல் முள் எயிறு
அரும்ப - புன்னகையினையுடைய கூரிய பற்கள் வெளிப்படவும், எள் அரிய
- இகழ்தலில்லாத, பல் உயிரும் எ உலகும் ஈன்றாள் - பல வுயிர்களையும்
எல்லா வுலகங்களையும் பெற்றவளாகயி உமையவள், முலை மூன்று உடையது
ஓர் பெண்பிள்ளை என - மூன்று முலைகளை யுடையதாகிய ஒருபெண்
மகவாக, மூவொரு பிராயமொடு நின்றாள் - மூன்று வயதுடன் நின்றாள்
எ - று.

     அமுதம் என் எனப் பிரித்தலுமாம். உடையதோர் பெண்பிள்ளை;
வழக்கு, ஒரு ன்று பிராயமென்க. ஈன்றாள் : பெயர். (19)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
குறுந்தளிர்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ
     புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிர்போ லசைந்துதளர் நடையொதுங்கி
     மழலையிள நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி
     யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோர்க் கிகபோகம்*
     வீடளிக்கு மம்மை யம்மா.

     (இ - ள்.) அறம் தழுவும் நெறி நின்றோர்க்கு - அறத்தைப்பொருந்திய
நன்னெறியில் ஒழுகுவோருக்கு, இகபோகம் வீடு அளிக்கும் - அம்மை -
இம்மை மறுமை யின்பங்களையும் வீடு பேற்றையும் அருளும்
உமையம்மையார், தளிர் குறுமெல் அடிகிடந்த - தளிர்போன்ற சிறிய
மெல்லிய திருவடிகளிற் கிடந்த, சிறுமணி நூபுரம் சதங்கை - சிறிய
மணிகளையுடைய சிலம்பும் சதங்கையும், குழறி ஏங்க - கலந்து ஒலிக்கவும்,
மழலை அளநகையும் தோன்ற - மழலைச் சொற்களும் புன்னகையுந்
தோன்றவும், நறுந்தளிர்போல் அசைந்து - நறி தளிர் அசைவது போல்
அசைந்து, தளர்நடை ஒதுங்க - தளர்ந்த நடை நடந்து, பிறந்த பெரும் பயன்
பெறு - பிறந்ததனாலாகிய பெரிய பயனைப் பெறுகின்ற,


     (பா - ம்.) * இகம்போகம்.