I


312திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பொன்மாலை மடி - காஞ்சன மாலையின் மடியின்கண், இருந்து ஒரு பெண்
பிள்ளை ஆனாள் - ஒரு பெண்ணாக விருந்தாள் எ - று.

     குழறி யேங்கல் - மயங்கி யொலித்தல். தளர் நடையாக. மழலை
யென்பதனோடும் உம்மையைக் கூட்டுக. இருந்து ஆனாள் என்பதை
ஆகியிருந்தாள் என மாற்றுக. அறம் - அறநூலுமாம். மறுமையின்பம்
உபலக்கணத்தாற் கொள்ளப்பட்டது. அம்மா : வியப்பிடைச்சொல். (20)

செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண்
     கருகாது சேல்போ னீண்ட
மையவாய் மதர்த்தகருங் கண்பசவா
     தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு
     மகவையெடுத் தணைத்தாண் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாள்
     முன்பெற்ற தோகை யன்னாள்.

     (இ - ள்.) செய்யவாய் வெளிறாது - சிவந்த வாய் விளர்க்காமலும்,
துணை முலைக்கண் கருகாது - இரண்டு முலைக்கண்களும் கறுக்காமலும்,
சேல் போல் நீண்ட - சேல் மீன் போலும் காதளவு நீண்ட, மையவாய்
மதர்த்த கருங்கண் பசவாது - மையையுடையனவாய் மதர்த்த கரிய கண்கள்
பசக்காமலும், ஐயிரண்டு மதியம் தாங்காது - பத்து மாதங்கள் சுமக்காமலும்,
ஐய ஆல் இலை வருந்தப் பெறாது - நொய்மையாகிய ஆலிலை போலும்
வயிறு வருந்தப் பெறாமலும், முன் பெற்ற தோகை அன்னாள் - முன்னே
பெற்ற மயில்போலும் மேனையை ஒத்தவளாகிய காஞ்சனை, பெறுமகவை,
தான்பெற்ற மகவை, எடுத்து அணைத்தாள் - வாரியெடுத்து மார்போடு
அணைத்தாள்; மோந்தாள் - உச்சிமோந்தாள்; துய்யவாய் முத்தங்கொண்டு
இன்புற்றாள் - புனிதமான வாயால் முத்தமிட்டு இன்பமிக்காள் எ - று.

     வாய் விளர்த்தல் முதலியன கருப்பக்குறிகள். வெளிறாதுமுதலிய
எதிர்மறை வினை யெச்சங்கள் பெறும் என்பது கொண்டு முடியும். மையை
அளாவி என வுரைத்தலுமாம். ஐய - நுண்ணிய. ஆலிலை : வயிற்றுக்கு
ஆகுபெயர். துய்ய - தூய. மேனையும் கருவுறாமல் மகளாகப் பெற்றாளாகலின் ‘முன்பெற்ற தோகை யன்னாள்’ என்றார். உமாதேவியார் சிவபெருமானை
வணங்கித், தக்கனுக்குப் புதல்வியாய் வளர்ந்த இவ்வுடலைச் சுமக்கிலேன்
எனச்சொல்லி, இறைவனருள் பெற்றுச் சென்று இமயமலையிலுள்ள ஒரு
தடாகத்தி லலர்ந்த தாமரை மலர் மீது குழவியாய் அமர்ந்திருக்க, அங்கே
தம்மைப் புதல்வியாகப்பெறுதற்குத் தவம் புரிந்துகொண்டிருந்த மலையரசன்
அக்குழவியைக்கண்டு ஆராமகிழ்ச்சியுடன் எடுத்துத் தன் மனைவியாகிய
மேனையின் கையிற் கொடுக்க அவள் பெரு மகிழ்ச்சியுடன் பெற்றுவளர்த்தாள் என்பது வரலாறு. (21)

பரையாதி விருப்பறிவு தொழிலாகி
     யுலகமெலாம் படைத்துக் காத்து
வரையாது துடைத்துமறைத் தருளியவை
     நின்றுந்தன் வடிவு வேறாய்