I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்313



உரையாதி மறைகடந்த வொருமுதல்வி
     திருமகளா யுதித்தற் கிந்தத்
தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ
     வதற்குரிய தவந்தான் மன்னோ.

     (இ - ள்.) பரை ஆதி விருப்பு அறிவு தொழில் ஆகி - பராசத்தி
ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி என்னம் ஐவகைச் சத்திகளாகி,
உலகம் எலாம் - எல்லாவுலகங்களையும், படைத்துகாத்து வரையாது துடைத்து
மறைத்து அருளி - படைத்தல் காத்தல் ஒழிவின்றி அழித்தல் மறைத்தல்
அருளல் என்னும் ஐவகைத் தொழில்களைப் புரிந்து, அவை நின்றும்
தன்வடிவு வேறாகி, உரை ஆதி - வாக்கு மனங்களையும், மறை -
வேதங்களையும், கடந்த - தாண்டி நிற்கின்ற, ஒரு முதல்வி - ஒப்பற்ற
தலைவியானவள், திருமகளாய் உதித்தற்கு - திருமகளாய்த் தோன்றுதற்கு,
இந்தத் தரை ஆளும் மன்னவன் - இந்நிலத்தினை ஆளும் மலயத்துவச
பாண்டியன், செய் தவம் இதுவோ - இம்மையிற் செய்த இத்தவமோ
அமைவது, அதற்கு உரிய தவம் மன் - அதற்குப் பொருந்திய தவம்
பெரிதாகும் எ - று.

     சிவசத்தி யொன்றே காரிய வேறுபாட்டால் ஐவகைச் சத்தியாகி
நிற்றலை,

"ஈறிலாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென"

என முன்னுங் கூறினார். ஐந்தொழில் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம்,
அநுக்கிரகம் என வடமொழியிற் பெயர் பெறும். அவற்றினின்றும் என்பது
காரியை தொக்கு அவை நின்றும் என நின்றது. ஆதியென்றதனால் மனம்
கொள்ளப்பட்டது; உமலையும் கொள்ளுதலுமாம். தவம் இது வென்றது
மகப்பேற்று வேள்வியை. மன் - பெரிது; முற்பிறவிகளிற் பெருந்தவம்
செய்திருக்க வேண்டுமென்பது. தான், ஓ : இரண்டும் அசைகள். (22)

கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து
     கரணமெலாங் கடந்தா னந்த
வெள்ளமாம் பரஞான வடிவுடையா
     டன்னன்பின் வெளிவந் தின்றோர்
பிள்ளையா யவதரித்த கருணையுந்தன்
     மணாட்டிதவப் பேறுந் தேறான்
பள்ளமா கடற்றானைப் பஞ்சவர்கோ
     னெஞ்சத்துட் பரிவு* கூர்ந்தான்.

     (இ - ள்.) கள்ளம் ஆம்நெறி ஒழுகும் பொறிகடந்து - வஞ்சமாகிய
வழியில் ஒழுகும் ஐம்பொறி உணர்வையும் கடந்து, கரணம் எலாம் கடந்து -


     (பா - ம்.) * நெஞ்சகத்துப் பிரிவு.