மன்னவநின் நிருமகட்கு
மைந்தர்போற்
சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென்
றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னனையா டனக்கிறைவன் வரும்பொழுதோர்
முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவர னருளாலோர் திருவாக்கு
விசும்பிடைநின் றெழுந்த தன்றே. |
(இ
- ள்.) மன்னவ - அரசனே, நின் திருமகட்கு - உன்னுடைய
திருமகளுக்கு, மைந்தர் போல் - புதல்வருக்குச் செய்வதுபோல், சடங்கு
அனைத்தும் வழாது - சடங்குகள் எல்லாம் வழுவாமல், வேதம் சொன்ன
முறைசெய்து - மறை கூறியபடி செய்து, தடாதகை என்று பெயர் இட்டு -
தடாதகை என்று பெயர் சூட்டி, முடி சூட்டுவாய் - மகுடஞ் சூட்டுவாய்;
இப்பொன் அனையாள் தனக்கு இறைவன் வரும் பொழுது - இந்தப்
பொன்போரும் வடிவினையுடையாளுக்குத் தலைவன் வருங்காலை, ஓர்
முலை மறையும் - ஒரு கொங்கை மறைந்துவிடும் (ஆதலால்), புந்திமாழ்கேல
என்ன - மனம் வருந்தாதே என்று, அரன் அருளால் ஓர் திருவாக்கு
விசும்பிடை நின்று எழுந்தது - சிவபெருமான் திருவருளால் ஒரு திருவாக்கு
வானினின்றும் தோன்றியது எ - று.
பெயரிட்டு
எனக் கூட்டுக. மாழ்குதல் - மயங்குதல். அன்று, ஏ :
அசைகள். (25)
அவ்வாக்குச் செவிநிரம்ப வன்புவகை
யகநிரம்ப வகல மெல்லாம்
மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும்
புனனிரம்ப விமலற் போற்றி
நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை
யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
கைவாக்கு மியங்கலிப்பக் கடிமாட
மனைப்புகுந்தான் கழற்கால் வேந்தன். |
(இ
- ள்.) அவ்வாக்குச் செவி நிரம்ப - அந்த வான் வாக்குச்
செவியில் நிரம்பியவுடன், அன்பு உவகை அகம் நிரம்ப - அன்பும்
மகிழ்ச்சியும் உள்ளத்தில் நிறையவும், மெய்வாக்கு மனம் ஒன்ற - உடல்
உரை உள்ளம் மூன்றும் ஒருவழிப்பட, விழிவாக்கும் புனல் அகலம் எல்லாம்
நிரம்ப - கண்கள் பொழியும் இன்ப நீர் மார்பு முழுதும் நிறையவும், கழல்
கால் வேந்தன் - வீரகண்டை யணிந்த காலினையுடைய மன்னன்,
விமலன்போற்றி - நின்மலனாகிய இறைவனைத் துதித்து, நெய் வாக்கும் முகம்
நிரப்பி - நெய்யினைச் சொரியும் வேள்வியினை முடித்து, எழுந்து
மனையொடும் சாலைநீத்து - மனைவியொடும் எழுந்துவேள்விச்சாலையை
விடுத்து, இரண்டுகை வாக்கும்இயம் கலிப்ப - இரண்டு பக்கங்களிலும்
|