I


316திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இயங்கள் ஒலிக்க, கடிமாட மனைபுகுந்தான் - காவலைக் கொண்ட
மாளிகையையுடைய அரண்மனையை அடைந்தான் எ - று.

     அன்பும் உவகையும். அகலமெல்லாம் புனல் நிரம்ப வென்க.
நெய்வாக்கு என்பதில் வாக்குதல் - வார்த்தல். நிரப்பி - பூரணாகுதி செய்து
முடித்து. கைவாக்கு - கைப்பக்கம்; வழக்கு; வாகு எனவும் வழங்கும்;
கைகளால் தாக்கப்படும் என்றுரைப்பாரு முளர்; வாக்கும் என்பதற்கு அது
பொருளாகாமை யுணர்க. (26)

முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார்
     முகத்துவகை முறுவல் பூப்ப
அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து
     கனகமழை யான்ற கேள்வி
விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு
     மம்முறையால் வெறுப்ப நல்கிப்
பரசிக்குங் கரதலத்தெம் பரன்கோயி
     னனிசிறப்புப் பல்க நல்கா.

     (இ - ள்.) முரசு அரித்ப்ப - பேரிகை ஒலிக்கவும், மங்கலம் கொண்டு
எதிர் வருவார் - எட்டு மங்கலங்களையும் ஏந்தி எதிர் வருகின்ற மகளிரின்,
முகத்து உவகை முறுவல் பூப்ப - முகத்தின்கண் மகிழ்ச்சி நகை தோன்றவும்,
அரசு இருக்கும் மண்டபம் புக்குஇனிது அமர்ந்து - அரசிருக்கை மண்டபத்தற்
புகுந்து இனிதாகக் கொலுவீற்றிருந்து, ஆன்ற கேள்வி விரசிருக்கும் மறையவர்
கை - நிறைந்த கேள்வி பொருந்தப்பெற்ற மறையவர் கைகளில், கனக மழை
பெய்து - பொன் மழையைப் பொழிந்து, எவர்க்கும் அம்முறையால் வெறுப்ப
நல்கி - ஏனை யாவர்க்கும் அங்ஙனமே (அவர்) வெறுக்கும் படி கொடுத்து,
பரசு இருக்கும் கரதலத்து எம்பரன் கோயில் - மழுப்படை தங்கிய
திருக்கரத்தினையுடைய எம் இறைவன் திருக்கோயிலில், நனி சிறப்புப் பல்க
நல்கா - மிகவும் திருவிழா முதலிய பெருகும்படி வேண்டியவற்றைக்
கொடுத்து எ - று.

     எட்டுமங்கலம் - சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு,
விளக்கு, கொடி, இணைக்கயல் என்பன. ஆன்ற - நிறைந்த; அகன்ற
என்பதன் மரூஉ. விரசியிருக்குமென்பது விகாரமாயிற்று. வெறுத்தல்
செறிதலாகலின் வெறுப்ப என்பதற்கு மிக என்றுரைத்தலுமாம். நல்கா -
நல்கி : செயப்படுபொருள் வருவிக்க. (27)

சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமி
     னேழாண்டு தேயத் தீட்டும்
இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி
     னிறைநிதிய மீட்டு மாயத்
துறைவிடுமி னறப்புறமு மாலயமும்
     பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக்
     கூய்முரசங் கறங்க்ச் சாற்றி.