(இ
- ள்.) சிறை விடுமின் - சிறைசெய்யப்பட்டவர்களை விட்டு
விடுங்கள்; சிறைக்களமும் சீத்திடுமின் - சிறைச்சாலையையும் தூய்மை
செய்யுங்கள்; ஏழு ஆண்டு தேயத்து ஈட்டும் இறைவிடுமின் - ஏழு
ஆண்டுவரை நாட்டில் வாங்கும் வரிகளை விட்டு விடுங்கள்; அயல் வேந்தர்
திறை விடுமின் - வேற்று நாட்டு மன்னர்களின் திறைகளை வாங்காது
விடுங்கள்; நிறை நிதியம் ஈட்டும் ஆயத்துறை விடுமின் - நிறைந்த
பொருளைத் தேடும் சுங்கத் துறையை நீக்கி விடுங்கள்; அறப்புறமும்
ஆலயமும் பெருக்கும் - அறச்சாலைகளையும் ஆலயங்களையும் ஓங்கச்
செய்யுங்கள், என - என்று, தொழாரைக் காய்ந்த கறை - பகைவர்களைக்
கொன்ற குருதிக் கறையையுடைய, மின் விடும் அயில் வேலான் - ஒளி வீசும்
கூரிய வேற்படையையுடைய பாண்டியன், வள்ளுவனை கூய் - வள்ளுவனை
அழைத்து, முரசங் கறங்கச் சாற்றி - பேரிகை சாற்றும்படி ஏவி எ - று.
சீத்தல்
- தூய்மை செய்தல். ஏழாண்டு, பால கிரகாரிட்ட நிவிர்த்தியின்
பொருட்டு; பன்னிரண்டும் கொள்வர். அயல் வேந்தர் - பணிந்த மன்னர்.
திறை - கப்பம். கறை - உதிரம். அயில் - கூர்மை. வள்ளுவன் - முரசறையும்
முதுகுடிப் பிறந்தோன். கூவி யென்பது விகாரமாயிற்று. இன்னின்ன
செய்கவென முரச மொலிக்கும்படி சொல்லி யென்க. சாற்றி - சாற்றுவித்து
எனினுமாம்.
"கறைபன் னீராண்
டுடன்விடுமீன் காமர் சாலை தளிநிறுமின்"
|
என்னும் சி்ந்தாமணிச்
செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (28)
கல்யாண மணிமௌலி வேந்தரையுங்
கால்யாப்புக் கழல நீத்துக்
கொல்யானை பரிநெடுந்தே ரரசுரிமை
தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
பல்லாருங் கொள்கவெனப் பண்டாரந்
தலைதிறந்து* பசும்பொ னாடை
வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத
லெனைப்பலவும் வெறுப்ப வீசி. |
(இ
- ள்.) கல்யாணம் மணி மௌலி வேந்தரையும் - பொன்னாற்
செய்த மணிகளழுத்திய முடிகளையுடைய மன்னர்களையும், கால் யாப்பு கழல
நீத்து - (அவர்கள்) கால் விலங்குகளைக் கழற்றி, கொல யானை பரி
நெடுந்தேர் அரசு உரிமை - கொல்லுகின்ற யானைகளையும் குதிரைகளையும்
நெடிய தேர்களையும் அரசியலுரியையையும், தொல் முறைால் கொடுத்துப்
போக்கி - முன்னுள்ளவாறே கொடுத்துப் போக விடுத்து, பல்லாரும் கொள்க
என - பலரும் எளிதிற் கொள்ளக் கடவரென்று, பண்டாரம் தலை திறந்து -
பொருள் அறையைத் திறந்து, பசும் பொன் ஆடை - பசிய
பொன்னாடைகளையும், வில் ஆரும் மணி - ஒளி நிறைந்த மணிகளையும்,
கொடும் பூண் - வளைந்த அணிகளையும், வெறுக்கை முதல் எனைப் பலவும்
- பொருள் முதலிய பலவற்றையும், வெறுப்ப வீசி - (அவர்கள்) வெறுக்கும்படி
நிறையக் கொடுத்து எ - று.
(பா
- ம்.) * தனைத்திறந்து.
|