தீட்டுவா ளிரண்டனைய கண்களிப்பத்
தோழியர்க்குத் தெரிய வாடிக்
காட்டுவா ளெனக்* கழங்கு பந்துபயின்
றம்மனையுங் கற்றுப் பாசம்
வீட்டுவான் மேலோடுகீழ் தள்ளவெமை
வினைக்கயிறு வீக்கி யூசல்
ஆட்டுவாள் காட்டுதல்போ லாடினா
ணித்திலத்தாம் பசைத்த வூசல். |
(இ
- ள்.) பாசம் வீட்டுவாள் - அடியார்கள் பாசத்தைப் போக்கு
வாளாகிய அம்மை, தீட்டுவாள் இரண்டு அனைய - தீட்டிய வாட்கள்
இரண்டனை ஒத்த, கண்களிப்ப - இருகண்களும் களிக்குமாறு, தோழியர்க்கு
தெரிய ஆடிக்காட்டுவாள் என - தோழிமார்களுக்கு (அவர்கள்ஸ்ரீ அறிய
ஆடிக் காட்டுவாளைப்போல, கழங்கு பந்து பயின்று - கழங் காடலையும்
பந்தாடலையுஞ் செய்து, அம்மனையும் கற்று - அம்மனை யாடலையும் கற்று,
மேல் கீழ்தள்ள எமைவினைக்கயிறு வீக்கி - மேலும் கீழும் புகுமாறு
எங்களை வினைகளாகிய கயிற்றால் பிணித்து, ஊசல் ஆட்டுவான் -
ஊசலாட்டுகின்ற அவ்வம்மை, காட்டுதல்போல் - (இங்கு அதனைக்)
காட்டல்போல, நித்திலத் தாம்பு அசைத்த ஊசல் ஆடினாள் - முத்து
வடத்தாற் கட்டிய ஊசலில் ஆடினாள் எ - று.
வீட்டுவாள்
: பெயர். மேலொடு கீழ் - துறக்க நிரயம்; ஒடு :
எண்ணிடைச் சொல். ஆட்டுவாள் : தொழிற் பெயருமாம், ஊசல் - ஊஞ்சல்.
(33)
இம்முறையாற் றாயர்க்குந் தோழியர்க்கு
மகத்துவகை யீந்தா ளாகி
அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை
யீவாளா யாத்த வாய்மைச்
செம்மறையா ரணமுதனா லீரெட்டுக்
கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
மெய்ம்மறையார் கலையனைத்து மேகலையா
மருங்கசைத்த விமலை யம்மா. |
(இ
- ள்.) இம்முறையால் - இவ்வகையான விளையாட்டுக்களால்,
தாயர்க்கும் தோழியர்க்கும் - அன்னைக்கும் தோழிகளுக்கும், அகத்து
உவகை ஈந்தாளாகி - உள்ளத்து மகிழ்ச்சியைக் கொடுத்தருளி, அம்
முறையால் - அங்ஙனமே, தாதைக்கும் அகத்து உவமை ஈவாளாய் -
தந்தைக்கும் மனத்தின்கண் மகிழ்ச்சியைக் கொடுத்தருள, ஆத்த வாய்மைச்
செம்மறை ஆரணம் முதல் - கடவுளின் வாய்மொழியாகிய வெவ்விய
மறையாகிய வேதமுதலாகவுள்ள, நால் ஈரெட்டுக் கலைமுழுதும் தெளிந்தாள் -
அறுபத்துநான்கு கலைகளையும் முற்றும் குற்றமறத் தெளிந்தாள்; அந்த
மெய்மறை ஆர்கலை அனைத்தும் - அந்த உண்மை யாகிய மறைமுதலிய
|