I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்321



நிறைந்த கலைகளனைத்தையும், மேகலையாமருங்கு அசைத்த விமலை -
மேகலையாக அரையிற் கட்டிய அம்மை எ - று.

     ஈவாளாய் - ஈவாளாக : எச்சத்திரிபு. கல்வியால் மகிழ்தல் தந்தை
யியல்பாகலின் இங்ஙனங் கூறினார். வாய்மை - வாய்மொழி; வாக்கு. மறை
ஆரணம், ஒரு பொருளன. அம்மா : வியப்பிடைச் சொல். அறுபத்து நான்கு
கலைகள் இவை யென்பதனைச் சுக்கிரநீதி நான்காம் அத்தியாயம் மூன்றாம்
பிரகரணத்திற் காண்க. (34)

சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப்
     பிளந்திருபாற் சொருகி யன்ன
பல்வாய்மைக் கடகரிதேர் பரியுகைக்குந்
     திாறனுமழற் பகழி தூர்க்கும்
வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங்
     கண்டிளமை விழுங்கு மூப்பிற்
செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு
     முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்.

     (இ - ள்.) வாய்மை சொல் கலைத்தெளிவும் - உண்மையைக் கூறும்
கலைகளின் தெளிவையும், முழுமதியைப் பிளந்து - நிறைந்த சந்திரனை
இருபிளவாக்கி, இருபால் சொருகி அன்ன - இரண்டு பக்கங்களிலும் சொருகி
வைத்தாற் போன்ற, பல் வாய் மை கட கரி - தந் தங்கள் அமைந்த கரிய
மதத்தினையுடைய யானையையும், தேர்பரி - தேரையும் குதிரையையும்,
உகைக்கும் திறனும் - செலுத்தும் வகையையும், அழல் பகழி தூர்க்கும் வில் -
கொடிய அம்புகளைப்பொழியும் வில்லும், வாள் வச்சிர முதல் பல்படைத்
தொழிலும் கண்டு - வாட் படையும் வச்சிரப்படையு முதலிய பல படைக்கலத்
தொழிலின் தேர்ச்சியையும் பார்த்து, இளமை விழுங்கு மூப்பில் செல் -
இளமையைப் போக்கிய மூப்புப் பருவத்திற் செல்கின்ற, வாய்மைத் திறல்
அரசன் - உண்மையையுடைய வெற்றி பொருந்திய மன்னனாகிய தந்தை,
திருமகட்கு முடிசூட்டும் செய்கை பூண்டான் - தன் திருமகளுக்கு மகுடஞ்
சூட்டுகின்ற செய்கையில் அமைந்தான் எ - று.

     தெளிவும் திறனும் தொழிலும் கண்டு. மூப்பிற் செல்லுதல் -
முதுமையுற்று நடத்தல். (35)

முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத்
     திசைதோறு முடங்கல் போக்கிக்
கடிகெழுதார் மணிமௌலிக் காவலரை
     வருவித்துக் காவல் சூழ்ந்த
கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப
     வழகமைத்துக் குன்ற மன்ன
தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு
     வேண்டுவன சூழ்ந்து செய்தான்.