(இ
- ள்.) குன்றம் அன்ன தொடி கெழுதோள் சுமதி - மலையை ஒத்த
வளையணிந்த தோளையுடைய சுமதி என்னும் அமைச்சன், முடி கவிக்கு
மங்கல நாள் வரையறுத்து - முடி சூட்டுதற்குரிய மங்கல மாகிய நன்னாளை
நிச்சயித்து, திசைதோறும் முடங்கல் போக்கி - திக்குகள் தோறும் ஓலை
விடுத்து, கடிகெழுதார் - மணம் பொருந்திய மாலையை யணிந்த,
மணிமௌலிக் காவலரை வருவித்து - மணி முடி தரித்த மன்னர்களை
வரச்செய்து, காவல்சூழ்ந்த கொடி அணி மா நகர் எங்கும் விழா எடுப்ப -
மதில் சூழ்ந்த கொடிகளையுடைய அழகிய பெரிய நகரத்திலுள்ளார்
எவ்விடத்தும் சிறப்புச் செய்ய, அழகு அமைத்து - ஒப்பனை செய்வித்து,
திருமணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான் - அழகிய முடிசூட்டு
விழாவுக்கு வேண்டும் பொருள்களை ஆராய்ந்து திரட்டினான் எ - று.
முடங்கல்
- திருமுகம்; ஓலையைச் சுருளாக்குதலின் முடங்கல் என்பது
பெயராயிற்று. காவல் - மதிலும் பிறவுமாம். கொடிகளை யணிந்த எனலுமாம்.
குன்ற மன்ன தோள். தொடி - வீரவளை. வேண்டுவன - வேண்டுங்
காரியங்களுமாம். (36)
மங்கலதூ ரியமுழங்க மால்யானை
யுச்சிமிசை வந்த பூத
கங்கைமுத லொன்பதுதீர்த் தமுநிரப்பிக்
கதிர்விடுபொற் கடம்பூ சித்துப்
புங்கவரை மந்திரத்தீ வளர்த்தமுத
மருத்தியெரி பொன்னாற் செய்த
சிங்கமணி யாதனத்தை நேசித்துப்
பூசித்துத் தெய்வ மேத்தி. |
(இ
- ள்.) மங்கல தூரியம் முழங்க - மங்கல வாத்தியங்கள் ஒலிக்க
- மால் யானை உச்சிமிசை வந்த பூத கங்கைமுதல் - பெரிய யானையின்
முடியில் வைத்துக் கொண்டுவந்த தூய்மையான கங்கைமுதலிய, ஒன்பது
தீர்த்தமும் நிரப்பி - ஒன்பது தீர்த்தங்களையும் நிரப்பி, கதிர் விடு பொன்
கடம் பூசித்து - ஒளி வீசும் பொன்னாற் செய்த குடத்தைப் பூசித்து, மந்திரத்தீ
வளர்த்து - மந்திரத்தால் வேள்வித்தீயை வளர்த்து, புங்கவரை அமுது
அருத்தி - தேவர்களை அவியுண வுண்பித்து, எரி பொன்னால் செய்த - ஒளி
வீசும் பொன்னாற்செய்யப்பட்ட, மணிசிங்க ஆதனத்தை - மணிகள் இழைத்த
சிம்மாதனத்தை, நேசித்து பூசித்து தெய்வம் ஏத்தி - அன்போடு பூசித்துத்
தெய்வத்தைப் பராவி எ - று.
பூதம்
- தூய்மை. ஒன்பது தீர்த்தம் - கங்கை, யமுனை, சரச்சுவதி,
நருமதை, காவிரி, குரி, கோதாவரி, துங்கபத்திரி, தாமிரபன்னி என்பன;
பிறவாறுங் கூறுப. அமுதம் அருத்தி என்பது ஒரு சொல்லாய்ப் புங்கவரை
யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. தெய்வம் - ஆதனத்திற்குரிய
தெய்வம்; கடவுளுமாம். (37)
திருமுடியை மதயானை மிசைவைத்து
நகரைவலஞ் செய்து பூசித்
தருமணியாற் சுடிகையிழைத் தாடகத்தாற்
குயிற்றியதோ ரைவாய் நாகம் |
|