பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப
வச்சிங்க பீடத் தேற்றிக்
குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப்
புண்ணியநீர் குளிர வாட்டி. |
(இ
- ள்.) திருமுடியை மதயானை மிசைவைத்து - அழகிய கிரீடத்தை
மதத்தினைடய யானையின்மேல் வைத்து, நகரை வலம் செய்து பூசித்து -
நகர்வலஞ் செய்வித்துப் பூசித்து, அருமணியால் சுடிகை இழைத்து - அரிய
மணிகளால் சூட்டுச் செய்து, ஆடகத்தால் குயிற்றியது ஓர் ஐவாய் நாகம் -
பொன்னாற் செய்யப்பட்டதாகிய ஒரு ஐந்தலை நாகமானது, பெருமணி நீள்
படம் - பெரிய மணிகளையுடைய நீண்ட படங்களை, மிசை பரப்பி கவிப்ப -
மேலே பரப்பிக் கவிக்குமாறு (செய்த), அச் சிங்க பீடத்து - அந்தச்
சிம்மாதனத்தில், குருமணி வாள் நகை மயிலை ஏற்றி - நிறம் பொருந்திய
முத்துப் போலும் வெள்ளிய பற்களையுடைய மயில் போலும் பிராட்டியாரை
ஏற்றி, கும்பத்துப் புண்ணிய நீர் குளிர ஆட்டி - கடத்தில் நிறைந்த புண்ணிய
நீரினால் குளிருமாறு திருமஞ்சனஞ் செய்வித்து எ - று.
செய்வித்து
என்பது செய்து என நின்றது. குயிற்றியது : செயப்பாட்டு
வினைப் பெயரெச்சமாயிற்று. கவிப்ப ஏற்றி எனினுமாம். நீரால் ஆட்டி. (38)
புங்கவர்மந் தாரமழை பொழியவருந்
தவராக்கம் புகலத் தெய்வப்
பங்கயமென் கொம்பனையா ராடமுனி
பன்னியர்பல் லாண்டு பாட
மங்கலதூ ரியமுழங்க மறைதழங்க
மாணிக்க மகுடஞ் சூட்டி
எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சர்
பணியுந்தன் னிறைமை நல்கா. |
(இ
- ள்.) புங்கவர் மந்தார மழைபொழிய - தேவர்கள் மந்தார மலர்
மழையைப் பொழியவும், அருந்தவர் ஆக்கம் புகல - அரிய முனிவர்கள்
ஆசி கூறவும், தெய்வப் பங்கயமென் கொம்பு அனையார் ஆட -
தெய்வத்தன்மை பொருந்திய தாமரை மலர்ந்த மெல்லிய பூங்கொம்பினை
ஒத்த தேவமகளிர்கள் ஆடவுத், முனி பன்னியர் பல்லாண்டு பாட -
முனிபத்தினிகள் பல்லாண்டு பாடவும், மங்கல தூரியம் முழங்க - மங்கள
வாத்தியங்கள் ஒலிக்கவும், மறை தழங்க - வேதம் முழங்கவும், எம் கருணைப்
பெருமாட்டிக்கு - எம் பெருங் கருணைப் பிராட்டியாருக்கு, மாணிக்க மகுடம்
சூட்டி - மணிமுடி சூட்டி, அரசு அமைச்சர் பணியும் தன் இறைமை நல்கா
-அரசர்களும் அமைச்சர்களும் வணங்கப் பெறும் தன் தலைமையைக்
கொடுத்து எ - று.
பொழிய
என்பது முதலிய செயவெனெச்சங்கள் சூட்டி யென்பதனோடு
தனித்தனி முடியும். ஏனை அரசரும் அமைச்சரும் பணியும் தலைமையைப்
பெருமாட்டிக்கு நல்கி. (39)
|