பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற
மதிகிரணம்* பரப்பி யன்ன
கோலமணிக் கவரிபுடை யிரட்டமலர்
மழைதேவர் குழாங்க டூற்றக்
காலையிளங் கதிர்கயிலை யுதித்தெனவெண்
கடாயானைக் கழுத்தில் வேப்ப
மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ
ரியமுழங்க வலஞ்செய் வித்தான். |
(இ
- ள்.) பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற - பால்போலும்
வெண்ணிறமுடைய சந்திரவட்டக் குடையானது மேலே நிழலைச் செய்யவும்,
மதி கிரணம் பரப்பியன்ன - அந்தச் சந்திரன் தன் கிரணங்களைப்
பரப்பினாற்போல, கோல மணிக் கவரி புடை இரட்ட - அழகிய
வெண்கவரிகள் இருபக்கங்களிலும் வீசவும், தேவர் குழாங்கள் மலர் மழை
தூற்ற - அமரர் கூட்டங்கள் மலர் மாரியைப் பொழியவும், காலை இளங்கதிர்
கயிலை உதித்தென - காலையிற் றோன்றும் இளஞாயிறு வெள்ளிமலையில்
உதித்தாற்போல, வேப்பம் மாலை முடிப்பெண் அரசை - வேப்பமலர்
மாலையை அணிந்த முடியினையுடைய பெண்ணரசாகிய தடாதகைப்
பிராட்டியாரை, கடா வெள் யானைக் கழுத்தில் - மதத்தினையுடைய
வெள்ளை யானையின் பிடரியில் (ஏற்றி), மங்கல தூரியம் முழங்க வலஞ்
செய்வித்தான் - மங்கல வாச்சியங்கள் ஒலிக்க நகர்வலஞ் செய்வித்தான்
எ - று.
பரப்பினாலன்ன
என்பது பரப்பியன்ன வென்றாயிற்று. கவரி - சாமரை.
இரட்டுதல் - மாறி வீசுதல். உதித்தென - உதித்ததென, பெண்ணரசு -
பெண்களுக்கு அரசும், பெண்ணாகிய அரசுமாம். ஏற்றி யென ஒரு சொல்
வருவிக்கப்பட்டது. (40)
பவிண்ணாடு
மொழிகேட்ட மகிழ்ச்சியினுந்
திருமகடன் விளக்க நோக்கி
உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்பச்
சிலபகல்சென் றொழிய மேனாட்
புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து
நடிப்பத்தன் புயமேல் வைத்த
மண்ணாடு மகட்களித்து வானாடு
பெற்றானம் மகவு பெற்றான். |
(இ
- ள்.) விண் ஆடு மொழி கேட்ட மகிழ்ச்சியினும் - விண்ணின்
கண் தோன்றிய அசரீரியைக் கேட்ட பொழுது உண்டான மகிழ்ச்சியை விட,
திருமகள் தன் விளக்கம் நோக்கி - செல்வப் புதல்வியாரின் விளக்கத்தைப்
பார்த்து உள்நாடு பெருங்களிப்புத் தலை சிறப்பு - உள்ளத்தில் விரும்புகின்ற
பெரிய மகிழ்ச்சியானது மிகச் சிறக்குமாறு, சில பகல் சென்று ஒழிய -
(பா
- ம்.) * மதிக்கிரணம்.
|