விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந்
தாதைக்கு விதியா லாற்றி
அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா
மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
சரதமறை யாய்மறையின் பொருளாயப்
பொருண்முடிவு தானாய்த் தேனின்
இரதமெனப் பூவின்மண மெனப்பரம
னிடம்பிரியா வெம்பி ராட்டி. |
சின்னாட்கள் கழிந்தொழிய,
மேல் நாள் - முன்னாளில், புண் நாடு வேல்
மங்கை குதுகலித்து நடிப்ப - (பகைவர்களின்) தலையினை நாடுகின்ற
வேலையுடைய வீரமகள் மகிழ்ந்து கூத்தாடுமாறு, தன்புயம் மேல்வைத்த மண்
நாடு - தனது தோளில் வைத்தாற்றிய நிலவுலகத்தை, மகட்கு அளித்து -
புதல்வியாருக்குக் கொடுத்து, வான் நாடு பெற்றான் - வானுலகத்தை
யடைந்தான்; அம்மகவு பெற்றான் - அந்தப் புதல்வியைப் பெற்றவனாகிய
மலயத்துவசன் எ - று.
கேட்ட
மகிழ்ச்சி - கேட்டதனாலாகிய மகிழ்ச்சி. வேல் மங்கை -
கொற்றவை; வீரலக்குமி. பகைவென்று ஆண்டமை கூறினார். மண்ணாடு
மகட்களித்து வானாடு பெற்றான் என்பது பரிவருத்தனையணி.
(41)
(இ
- ள்.) சரத மறையாய் - உண்மை மறையாயும், மறையின்
பொருளாய் - அம்மறையின் பொருளாயும், அப்பொருள் முடிவு தானாய் -
அந்தப் பொருளின் முடிவாயும், தேனின் இரதமென - தேனின் சுவை
போலவும், பூவின் மணமென - பூவின் மணம் போலவும், பரமனிடம் பிரியா
எம்பிராட்டி - இறைவனிடத்தினின்றும் நீங்காத எம் பிராட்டியார், விரத நெறி
அடைந்து - விரத நெறியை எய்தி, தாதைக்கு ஈற்றுக்கடன் பிறவும் விதியால்
ஆற்றி - தந்தைக்குப் பிற்கடன் முதலிய பிறவற்றையும் முறைப்படிசெய்து,
அரதனமெல் அணைமேற் கொண்டு - மணிகளிழைத்த மெல்லிய
சிம்மாதனத்தில் வீற்றிருந்து, உலகம் எலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வாளானாள்
- உலக மனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆளலுற்றாள் எ - று.
கடனும்
பிறவுமென விரிக்க. ஈற்றுக்கடன் - அந்தியேட்டி. பொது வறப்
புரந்தாரென்பார் உலகமெலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வாளானாள் என்றார்.
நீரின் றண்மையனல் வெம்மையெனத் தனையகலாதிருந்து என முற்கூறியதுங்
காண்க. இடம்பிரியா - இடர் பாகம் பிரியாத என்றுமாம். (42)
[
வேறு - ]
|
மண்ணர சிறைஞ்ச
ஞால மனுவழி புரந்து மாறன்
விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோ னுள்ளத்
தெண்ணர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப்
பெண்ணர சிருந்து யுருட்டிய பெருமை சொல்வாம். |
|