(இ
- ள்.) மண் அரசு இறைஞ்ச ஞாலம் மனுவழி புரந்து - நில
வுரகத் தரசரெல்லாம் வணங்குமாறு இம் மண்ணுலகை மனுமுறை யால்
ஆண்டு, மாறன் விண் அரசு இருக்கை எய்தப் பெற்றபின் - மலயத்துவச
பாண்டியன் விண்ணுலகத்தில் இந்திரனது ஆதனத்தை அடையப் பெற்ற
பின்பு, விடையோன் உள்ளத்து எண் - இடப வாகனத்தையுடைய இறைவன்
திருவுள்ளத்தின்கண் கருதுகின்ற, அரசு அன்னமென்ன - அரச
அன்னத்தைப்போல, தென்னவன் ஈன்ற கன்னிப்பெண் அரசு -
அப்பாண்டியன் பெற்ற கன்னியாகிய பெண்ணரசியார், இருந்து -
அரியணையில் வீற்றிருந்து, நேமி உருட்டிய பெருமை சொல்வாம் -
ஆணையாகிய திகிரியைச் செலுத்திய பெருமையைக் கூறுவாம் எ - று.
இந்திரனது
ஆதனமென்பதனை,
"அலையத்தரி
யட்டவ னாதன நீத்து" |
எனப் பின் வருதலா
னறிக. எண் : வினைத்தொகை. எண்ணும் கன்னி
என்ன, ஈன்ற கன்னி எனத் தனித்தனியியையும் மூன்றமடியிற் சீரெதுகை
பயின்றிருத்தல் காண்க. ஆணையைத் திகிரியாகக் கூறுதல் வழக்கு. (43)
இன்னிய மியம்பு மாக்க* ளெழுப்பவா னிரவி தோன்றக்
கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீ இக் கடிநீ ராடித்
தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா. |
(இ
- ள்.) இன் இயம் இயம்புமாக்கள் எழுப்ப - இனிய இயங்களை
ஒலிக்கு மக்கள் (அவ்வொலியால்) எழுப்ப, வான் இரவி தோன்ற -
வானின்கண் ஞாயிறு உதிக்க, கன்னல் ஐந்து என்ன - நாழிகை ஐந்து என்று
சொல்ல (உள்ள அது போது), பள்ளித்துயில் எழீஇ - படுக்கையினின்றும்
துயில் நீத்தெழுந்து, கடி நீர் ஆடி - மணமுள்ள நீரில் மூழ்கி, தன் இறை
மரபுக்கு ஏற்ற - தன் மன்னர் மரபுக்குத் தக்க, நியதிமா தானம் - கடன்கள்
பெரிய தானங்கள், அன்பு துன்னிய கடவுள் பூசைத் தொழில் - அன்பு மிக்க
சிவபூசையாகிய கிரியை, முதல் அனைத்தும் - முதலாகிய யாவற்றையும்,
முற்றா - செய்து முடித்து எ - று.
அன்பு
மிக்குச் செய்யும் பூசையினை அன்புமிக்க பூசையென
உபசரித்தார்; துன்னிய கடவுள் என்னலுமாம். (44)
திடம்படு மறிஞர் சூழச் சிவபிரான் கோயின் முன்னிக்
கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண்டார்க்கும்
விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயி னண்ணி. |
(இ
- ள்.) திடம்படும் அறிஞர் சூழ - கலங்காத அறிவினையுடைய
அமைச்சர்கள் புடைசூழ, சிவபிரான் கோயில் முன்னி - சோமசுந்தரக்
கடவுளின் திருக்கோயிலை யடைந்து, கடம்பு அடி முளைத்த முக்கண்
கரும்பினை - கடம்ப மரத்தினடியில் முளைத்த மூன்று கண்களையுடைய
|