I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்327



கரும்பும், மறைவண்டு ஆர்க்கும் - வேதமாகிய வண்டுகள் ஒலிக்கப் பெறும்,
விடம்பொதிகண்டத்தேனை - நஞ்சு பொதிந்த திருமிடற்றினை யுடைய
தேனும் ஆகிய பெருமானை, விதிமுறை வணங்கி மீண்டு - விதிப்படி
பணிந்து (அங்கு நின்றும்) திரும்பி, குடம்பயில் குடுமி - கலசங்கள்
பொருந்திய முடியினையுடைய, செம்பொன் குருமணிக் கோயில் நண்ணி -
சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய மணிகள் பதித்த தமது
மாளிகையை யடைந்து எ - று.

     கரும்பென்றும், தேனென்றும் உவமையாற் கூறினார்; இன்பம்
விளைத்தலின். கண் - விழயையும் கணுவையுங் குறிக்கும்,

"கண்கள் மூன்றுடையதோர் கரும்பே"

என்பது திருவிசைப்பா. இறைவனைத் தேனென்றும் மறையினை
வண்டென்றும் உருவகித்தல்,

"மன்றுளாடுமது வின்னசையாலே மறைச்சுரும்பறை
புறத்தின் மருங்கே"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுளிலும் காணப்படுமாறறிக.
கண்டத்தோனை என்னும் பாடம் சிறவாமை காண்க. (45)

அரசிறை கொள்ளுஞ் செம்பொ னத்தாணி யிருக்கை யெய்தி
நிரைசெறி மடங்க லாறு முடங்கின நிமிர்ந்து தாங்க
விரைசெறி மலர்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
திரைசெறி யமுதிற் செய்த பாவைபோற் சிறந்து மாதோ.

     (இ - ள்.) அரசு இறைகொள்ளும் - அரசர்கள் தங்கியிருக்கும்,
செம்பொன் அத்தாணி யிருக்கை எய்தி - சிவந்த பொன்னாலாகி அத்தாணி
மண்டபத்தை யடைந்து, நிரை செறி ஆறு மடங்கல்முடங்கின நிமிர்ந்து
தாங்க - வரிசையாக நெருங்கிய ஆறு சிங்கங்கள் வளைந்தன வாய்க்
கழுத்தை நிமிர்த்தித் தாங்குமா றியற்றிய, விரை செறி மலர் மீப்பெய்த -
மணம் நிறைந்த மலர்களை மேலே பெய்த, வியன்மணித் தவிசில் மேவி -
பெரிய மணியாதனத்தில் வீற்றிருந்து, திரை செறி அமுதில் செய்த
பாவைபோல் சிறந்து - கடலிற்றோன்றிய அமுதத்தாற் செய்த பாவை போலப்
பொலிந்து எ - று

     இறைகொள்ளல் - தங்கல் : ஒரு சொல்; அரசிறை - பகுதியுமாம்
தாங்க வியற்றிய என்க. மீ மல்லான் திரை : ஆகுபெயர். தூய்மைக்கும் இனிமைக்கும் அமுது கூறினார்;

"ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவ மமைக்குந் தன்மை
யாதெனத் திகைக்கு மல்லான் மதனற்கு மெழுத வொண்ணா"

என்றார் பிறரும். மாது, ஓ : அசைகள். (46)

அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்கு காதல்
கனிந்தபார் மகளி ராய்வந் தடைப்பைபொற் களாஞ்சி யேந்த
இனந்திரி பதுமக் கோயி லிருவரு மனைய ராகிப்
புனைந்தவெண் கவரிக் கற்றை யிருபுடை புரட்டி வீச.

     (இ - ள்.) அனிந்திதை அமுதின் சாயல் கமலினி அணங்கு -
(திருக்கயிலாய மலையில் அகம்படித்தொண்டு செய்யும்) அனிந்திதையும்