I


328திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அமுதைப்போலும் மென்மைத் தன்மையையுடைய கமலினியும் ஆகிய
தெய்வமகளிர், காதல் கனிந்த பார்மகளிராய் வந்து - அன்பு முதிர்ந்த
மானிய மகளிராய்த் தோன்றி, அடைப்பை பொன்களாஞ்சி ஏந்த -
அடைப்பையையும் பொன்னாற் செய்த களாஞ்சியையும் ஏந்தவும், இனம்திரி
பதுமக் கோயில் இருவரும் - நிறம் மாறுபட்ட தாமரைமலரைக்
கோயிலாகவுடைய திருமகளும் கலைமகளும், அனையராகி - அம் மானிட
மகளிராகி, புனைந்த வெண் கற்றை கவரி - அலங்கரித்த வெள்ளிய
கற்றையாகவுள்ள சாமரைகளை, இருபுடை புரட்டி வீச - இருபுறங்களிலும்
புரட்டி வீசவும் எ - று.

     கமலினி அனிந்திதை யென்னும் இவ்விருவருமே பரவை நாய்ச்சி
யாராகவும் சங்கிலி நாய்ச்சியாராகவும் திருவவதாரஞ் செய்தவர்கள்.
அடைப்பை - இலையமுதிடும் பை. களாஞ்சி - படிக்கம்; தட்டமுமாம்.
செந்தாமரை வெண்டாமரை யென்பார் இனந்திரிபதுமம் என்றார்.

செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங்
கடியவிழ் மலரிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
முடிகெழு வேந்த ருள்ளார் முடிமிசை மிலைந்த தாமம்
அடிமிசைச் சாத்தி நங்கை யாணையா றேவல் செய்ய.

     (இ - ள்.) செடி உடல் எயினச் செல்வன் - முடைநாறும் உடம்
பினையுடைய வேடுவக்குலத் தலைவராகிய கண்ணப்பர், சென்னிமேல்
சுமந்து சாத்தும் - முடியின்மேல் சுமந்து வந்து இடும், கடி அவிழ் மலரின்
- மணம் விரிந்த திருப்பள்ளித்தாமம் போல, பொன்னிக் காவலன் - காவிரிக்கரசனாகிய சோழனும், குடக்கோன் - மேற்புல அரசனாகிய சேரனும், ஏனை முடிகெழு வேந்தர் உள்ளார் - மற்றைய முடிசூடிய மன்னராயுள்ளவர்களும், முடிமிசை மிலைந்த தாமம் - (தங்கள்) முடியின்கண் அணிந்த மாலைகளை, அடிமிசைச் சாத்தி - திருவடியின்கண் இட்டு, நங்கை ஆணை ஆறு ஏவல் செய்ய - அம்மையாரின் ஆணைவழி நின்று ஏவல் செய்யவும் எ - று.

     செடியுடன் என்பதனை ‘முடுகு நாறு குடிலை யாக்கையன்’ எனவும்,
சென்னி மேற் சுமந்து சாத்துதலை ‘தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி’
எனவும் முறையே, கல்லாடரும் நக்கீரரும் திருக்கண்ணப்பர் திருமறத்துட்
கூறுதலா னறிக. பொன்னி பாயும் நாட்டுக்கரசனைப் பொன்னிக் காவலன்
என்றார்; நாயகனுமாம்;

"கருங்கயற்கண் விழத்தொல்கி நடந்ததெல்லா நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன்வாழ காவேரி"

என்று சிலப்பதிகாரம் கூறுதலுங் காண்க. சேரன் குடக்கோவெனப்
படுதலைக் குடக்கோச் சேரல்’ என வருதலா னறிக. வணங்கி என்ப தனைப்
பிறிதோராற்றாற் கூறினார்; இது பிறிதினவிற்சியணி. (48)

வையுடை வாள ராகி மார்புறப் பின்னி யார்த்த
கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்கஞ்
செய்யுமென் றிமையார் நோக்கி+நோக்குமேற் செங்கை கூப்பி
உய்குந மெனவாய் பொத்தி யுழையர்தம் பணிகேட் டுய்ய.

     (பா - ம்.) * கருணை நாட்டம். +இமையா நோக்கி.