(இ
- ள்.) உழையர் - ஏவல் செய்வோர், வை உடை வாளராகி -
கூரியவாளை யுடையவராகியும், மார்பு உறப் பின்னி ஆர்த்த கையினர்
ஆகி - மார்பிலே பொருந்தப் பின்னிக்கட்டிய கையையுடையவராகியும்,
அன்னை என்று தன் கருணை நோக்கம் செய்யும் என்று - அன்னை யார்
எப்பொழுதும் தம் அருட் பார்வையைச் செலுத்துவாரோஎன்று, இமையார்
நோக்கி - கண்மூடாமல் பார்த்து, நோக்குமேல் - அரு ணோக்கஞ்
செய்வாராகில், செங்கைகூப்பி - சிவந்த கரங்களைக்குவித்து, உய்குநம் என
வாய் பொத்தி - பிழைத்தோம் என்று வாய்பொத்தி, தம்பணி கேட்டு உய்ய -
தமது ஏவலைக் கேட்டு உய்தி பெறவும் எ - று.
வை
- கூர்மை. இமையார் : முற்றெச்சம். உய்குநம் : எதிர் காலச்
சொல், இறந்தகாலங் குறித்தது. (49)
ஆங்கவன் மராட வேந்த னவன்கரு நாடர் வேந்தன்
ஈங்கிவன் விராடர் வேந்த னிவன்குரு நாடர் வேந்தன்
ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள். |
(இ
- ள்.) கஞ்சுகப் படிவமாக்கள் - சட்டை தரித்த வடிவத்தை
யுடைய கஞ்சுக மாக்கள், ஆங்கு அவன் மராடர் வேந்தன் - அங்கு
நிற்கின்ற மன்னன் மராடநாட்டினர்க்கு அரசன், அவன் கருநாடர் வேந்தன்
- அவ்விடத்து நிற்பவன் கருநாட்டாரரசன்; ஈங்கு இவன் விராடர் வேந்தன் -
இங்கு நிற்கும் இவன் விராட நாட்டினர் வேந்தன்; இவன் குருநாடர் வேந்தன்
- இங்கு நிற்போன் குருநாட்டவர்க்கு மன்னன்; ஊங்கு உவன் சேரன் -
நடுவில் நிற்கும் உவன் சேரன்; உவன் சென்னி என - ஊங்கு நிற்போன்
சோழன் என்று, கோலால் சுட்டி பாங்கு இருமருங்கும் காட்ட - பிரப்பங்
கோலால் சுட்டி வரி சையாக இரு பக்கங்களிலும் நின்று காட்டவும் எ - று.
ஆங்கு
முதலியவற்றின் பின்னுள்ள அவன் முதலியன பெயர்
மாத்திரையாய் நின்றன; ஆங்கு முதலியன அசையுமாம். உகரச்சுட்டு
நடுவையும் முன்னையும் பின்னையும் குறிக்கும். கஞ்சுமாக்கள் -
தூதரெனவும், சட்டையிட்ட பிரதான ரெனவும் கூறுவர்;
"சஞ்சயன் முதலாத்
தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வரீரைஞ் ஞூற்றுவரும்" |
என்னும் சிலப்பதிகார
வடிகளின் அரும்பதவுரை நோக்குக. (50)
செந்தமிழ் வடநூ லெல்லை தெரிந்தவர் மறைநூ லாதி
அந்தமி லெண்ணெண் கேள்வி யளந்தவர் சமய மாறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போத மாண்ட
சிந்தனை யுணர்வான் மாயை வரிகெடச் செற்ற வீரர். |
(இ
- ள்.) செந்தமிழ வடநூல் எல்லை தெரிந்தவர் - செந்தமிழின்
முடிவையும் வடநூலின் முடிவையும் தெரிந்தவர்களும், மறை நூல் ஆதி -
வேதநூல் முதலிய, அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் -
அளவில்லாத அறுகத்து நான்கு கலைகளையும் வரையறுத்
துணர்ந்த வர்களும்,
|