சயம் ஆறும்
வந்தவர் - அறுவகைச் சமய நூல்களும்
கைவந்தவர்களும், துறந்தோர் - பற்றற்றவர்களும், சைவமாதவர் - சிவபிரான்
திருத்தொண்டர்களும், போதம் மாண்ட - பசுபோதங் கெட்ட, சிந்தனை
உணர்வால் - தியானத்தோடு கூடிய மெய்யுணர்ச்சியால், மாயை வலிகெடச்
செற்ற வீரர் - மாயையினது வலிகெடு மாறு வென்ற மெய்ஞ்ஞானிகளாகிய
வீரர்களும் எ - று.
ஆறு
சமயம் முற் கூறப்பட்டன. வருதல் - கைவருதல். மாயை
வலிகெடச் செற்றலைத் திருவாசகத்துத் திருப்படை
யெழுச்சியுள்,
"வானவூர் கொள்வோநா
மாயப்படை வாராமே" |
எனக் கூறுதலா னறிக.
(51)
முன்னிருந் தினிய தேற்று மூத்தவ ரெண்ணி யெண்ணிப்
பன்னுமைந் துறுப்பிற் கால மளந்தறி பனுவன் மாந்தர்
பின்னுமுன் னோக்குஞ் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி யோடும்
இன்னமு தனைய கேள்வி மந்திரர் யாருஞ் சூழ. |
(இ
- ள்.) முன் இருந்து இனிய தேற்றும் மூத்தவர் - எதிரிருந்து
உறுதிப் பொருள்களை அறிவிக்கின்ற பெரியோர்களும், எண்ணி எண்ணிப்
பன்னும் - ஆய்ந்தாய்ந்து கூறுகின்ற, ஐந்து உறுப்பில்காலம் அளந்து
அறிபனுவல் மாந்தர் - ஐந்து அங்கங்களால் காலங்களை அறியும்
சோதிடநூல் உணர்ந்தவர்களும், பின்னும் முன் நோக்கும் சூழ்ச்சிப்
பெருந்தைகச் சுமதியோடும் - மேல் வருவனவற்றையும் முன்
நிகழ்ந்தனவற்றையும் ஆராய்ந்து காணும் சூழ்ச்சித் திறத்தில் பெரிய
தகுதியினையுடைய முதல் மந்திரியாகிய சுமதியோடும், இன் அமுது அனைய
கேள்வி மந்திரர் யாரும் சூழ - இனிய அமுதத்தைஒத்த கேள்வி நலமுடைய
அமைச்சர் அனைவரும் சூழவும் எ - று.
மூத்தவர்
- அறிவால் முதிர்ந்தோர்; உறுதி கூறம் புரோகிதர்.
ஐந்துறுப்பு - பஞ்சாங்கம்; திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்
என்பன. பனுவன் மாந்தர் - கணிகள். முன்னும் என விரிக்க. சுமதி -
முதலமைச்சன்; பட்டம்.(52)
கற்றறி யந்த ணாளர் விருத்திகள் கடவுட் டானத்
தற்றமில் பூசைச் செல்வ மறப்புற நடக்கை யேனைச்
செற்றமில் குடிகள் மற்று மமைச்சராற் றெளிந்தும் வெவ்வே
றொற்றுவிட் டுணர்ந்தும் வேறு குறையுண்டே லொறுத்துத் தீர்த்தும். |
(இ
- ள்.) கற்று அறி அந்தணாளர் விருத்திகள் - (மறை முதலிய
நூல்களைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் விருத்திகளையும், கடவுள் தானத்து
அற்றம்இல் பூசைச்செல்வம் - தேவாலயங்களில் நடக்கும் குற்றமில்லாத
பூசனைச் சிறப்புக்களையும், அப்புறம் நடக்கை - அறச் சாலைகளின்
நிகழ்ச்சிகளையும், ஏனைச் செற்றம் இல் குடிகள் - அவை யொழிந்த
வெறுப்பு இல்லாத குடிகளின் (வாழ்க்கைகளையும்), மற்றும் - பிறவற்றையும்,
அமைச்சரால் தெளிந்தும் - மந்திரிகளால் உணர்ந்தும், வெவ்வேறு
ஒற்றுவிட்டு உணர்ந்தும் - வேறு வேறு ஒற்றர்களை அனுப்பி அறிந்தும்,
|