வேறு குறை உண்டேல்
ஒறுத்துத் தீர்த்து - அவைகளுள் வேறு குறைகள்
இருக்குமானால் தண்டித்து அக்குறைகளைப் போக்கியும் எ - று.
விருத்திகள்
- பிரமதேயமாக விடப்பட்ட மானியம் முதலியன;
தொழல்களுமாம். கடவுட்டானம் - திருக்கோயில்; திருமடம் முதலியவுமாம்.
நடக்கை - நடைபேறு. ஏனை - மற்றும் : இடைச்சொல். செற்ற மின்மை -
அன்புடைமை. வெவ்வேறு ஒற்றுவிடவேண்டும் என்பது,
"ஒற்றொற் றுணராமை
யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்" |
என்னும் திருக்குறளா
லறிக. வேறுகுறை - மாறாகிய குறை; அதற்குக்
காரணமானவரை யொறுத்தென்க. (53)
ஆரியுத் தேசத் தானு மிலக்கண வமைதி யானுஞ்
சோதனை வகைமை யானுஞ் சொன்னநூ லனுவா தித்து
நீதியி னவற்றாற் கண்டித் தவ்வழி நிறுத்தித் தம்மில்
வாதிகள் வாதஞ் செய்யுங் கோட்டிமேன் மகிழ்ச்சி கூர்ந்தும். |
(இ
- ள்.) ஆதி உத்தேசத்தானும் - முதலாகிய உத்தேசத்தினாலும்,
இலக்கண அமைதியானும் - இலக்கண அமைவினாலும், சோதனை
வகைமையானும் - சோதனை வகையாலும், சொன்ன நூல் - பிறர் கூறிய நூற்
பொருள்களை, அநுவாதித்து - எடுத்து மொழிந்து, நீதியின் -
முறைமையினையுடைய, அவற்றால் - தாங் கூறும் உத்தேசம் முதலிய வற்றால்,
கண்டித்து - அவற்றை மறுதது, அவ்வழி நிறுத்தி - தாம் கூறியவங்றறை
அந்நெறியிலே நிலை பெறச் செய்து, வாதிகள் - வாதியராயினார், தம்மில்
வாதம் செய்யும் கோட்டி மேல் - தம்முள் வாதம் புரியுங் கூற்றினிடத்து,
மகிழ்ச்சி கூர்ந்தும் - மகிழ்ச்சிமிக்கும் எ - று.
உத்தேசம்
- தான் கூறும் பொருளைப் பெயர் மாத்திரையான்
எடுத்தோதல்; இலக்கணம் - இலக்கியத்தின் சிறப்புயில்பு; அவ் வியாத்தி
அதிவியாத்தி அசம்பவம் என்னும் முக்குற்றங்களும் இல்லாத தன்மை.
சோதனை - இலக்கியத்தில் இலக்கணமுளதாதலை ஆராய்தல். நூல் என்றது
ஈண்டுப் பிறர் கூறிய பொருளை. அது வாதித்தல் - பிறர் கூறியவற்றை ஒரு
பயன் நோக்கித் தான் எடுத்து மொழிதல், நீதியின் - தருக்க முறைமையால்.
அவற்றால் - அவ்வுத்தேசம் முதலியவற்றால்; தாம் கூறும் அவற்றாலென்க.
நிறுத்தல் - தங்கொள்கையைத் தாபித்தல். வாதிகள் - பிறர்மத மறுத்துத்
தம்மத நிறுத்துவோர். கோட்டி - கூட்டம்; அவை; ஈண்டு வாதஞ் செய்யுங்
கூற்று; கோட்டி கொளல் என்பதுங் காண்க. (54)
பையுள பகுவாய் நாகப் பள்ளியோ னாதி வானோர்
கையுள வலியா லட்ட கடலமு தனைத்தும் வாரிப்
பொய்யுள மகலக் கற்ற புனிதநூற் புலவர் நாவிற்
செய்யுளின் விளைவித் தூட்டத் திருச்செவி தெவிட்ட வுண்டும். |
|