வேள்விகளையும், பல
அறம் - பல அறங்களையும், ஆக்கம் செய்ய -
விருத்தி செய்தற்பொருட்டு, நல் நிதி அளித்தும் - நல்லபொருள்களைக்
கொடுத்தருளியும், வேள்வி நடாத்தியும் - தாம் வேள்விகளைச் செய்தருளியும்,
செல்வம் கல்வி - செல்வப் பொருளையும் கல்விப்பொருளையும், தன் இரு
கண்களாக - தம் இரண்டு விழிகளாகக் (கொண்டு), நாளும் தழைந்திட
வளர்க்கும் - நாடோறும் தழைத் தோங்கும்படி அவற்றை வளர்த்தும்
வருவார் எ - று.
வேறு
என்பதற்குப் பிரமசரிய முதலிய ஏனைய நிலைகள் எனப்
பொருள் கொள்வாருமுளர். ஆக்கஞ்செய்தல் - வளர்த்தல்; ஒருசொல்.
நாட்டிற்குச் செல்வமும் கல்வியும் இன்றியமையாதன வென்றார்;
"நற்றவஞ்செய்
வார்க்கிடந் தவஞ்செய் வார்க்கு மஃதிடம்
நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய் வார்க்கு மஃதிடம்" |
என்னும் சிந்தாமணிச்
செய்யுள் நினைக்கற் பாலது. வளர்க்கும் என்பதை
வளர்த்தும் வருவார் என விரிக்க. இன்னிய மியம்பும் என்னுஞ் செய்யுள்
முதல் இதுகாறும் ஒரு தொடர். (59)
ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்தி பெற்ற
முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
செப்பலும் புகழன் றென்னிற் றென்னவன் கன்னி யாகி
இப்புவி மனுவிற் காக்கு மென்பதென் பேதை மைத்தே. |
(இ
- ள்.) ஒப்பு உரு முதல் ஈறு இல்லா ஒருத்தி - ஒப்பும் வடிவமும்
முதலும் முடிவுமில்லாத சிவசத்தி, தன் சத்திபெற்ற - தன் சத்திகளாலே
பெறப்பட்ட, முப்பெருந் தேவராலே - மூன்று பெரிய தேவர்களாலே,
முத்தொழில் நடாத்தும் என்று செப்பலும் - மூன்று தொழிகளையும்
நடாத்தாநிற்கும் என்று கூறுதலும். புகழ் அன்று என்னில் - புகழன்று
என்றால், தென்னவன் கன்னியாகி - (அவள்) பாண்டியன் மகளாகி, இப்புவி
மனுவிற் காக்கும் என்பது என் பேதைமைத்தே - இந்நிலவுலகை
மனுமுறையால் ஆளும் என்று கூறுவது என் அறியாமையைக் காரணமாக
உடையதே எ - று.
தன்
சத்தியென்றது மகேசை முதலிய சக்திகளை. முப்பெருந் தேவர் -
அயன், அரி, அரன். காக்குமென்பது - காக்கு மென்பதை ஒரு புகழாகக்
கூறுவது. (60)
வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதன் குடைமனு வேந்தன்
கரைசெய் நூல்வழ கோல்செலக் கன்னியாம் பருவத்
தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு. |
(இ
- ள்.) வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி -
மலையை ஒத்த அணிகளை அணிந்த கொங்கைகளையுடைய தடாதகை
என்னும் பெயருடைய மடவரலாகிய பிராட்டியார், விரைசெய் தார்
முடிவேய்ந்து - மணம் வீசுகின்ற மாலையணிந்த முடியினைத் தரித்து,
|