சத்திபீடம்
அறுபத்து நான்காவன : - கோபாலபுரத்தில் உள்ள
இலக்குமி பீடமும், மாதுபுரத்திலுள்ள இரேணுகா பீடமும், துளசா புர பீடமும்,
சத்த சிருங்க பீடமும், இங்குலையிலுள்ள சுவாலாமுகி பீடமும்,
சாகம்பரியிருள்ள பிராமரி பீடமும், ஸ்ரீரதத தந்திகையிலுள்ள துர்க்கை
பீடமும். விந்தியாசல பீடமும். திருக்காஞ்சியிலுள்ள அன்ன பூரணி பீடமும்,
விமலையிலுள்ள பீமாதேவி பீடமும், திருச்சந்திரலையிலுள்ள கௌசிகி பீடமும், நீல பருவதத்திலுள்ள
மீனாட்சி பீடமும், திருநகரத்திலுள்ள சாம்புநதேச்சுவரி
பீடமும், நேபாளத்திலுள்ள இரகசிய காளி பீடமும், மதுரையிலுள்ள மீனாட்சி
பீடமும், வேதாரணியத்திலுள்ள சுந்தரி பீடமும், ஏகாம்பர பீடமும்,
மகாலசத்திலுள்ள யோகேச்சுவரி பீடமும், சீனாவி சீனாலுள்ள நீல சரச்சுவதி
பீடமும், வைத்திய நாதத்திலுள்ள வகலை பீடமும், மணித்தீபத்திலுள்ள
புவனேச்சுவரி பீடமும், காம யோனி மண்டல மென்கிற திரிபுர பைரவி
பீடமும், புட்கரத்திலுள்ள காயத்திரி பீடமும், அமரேசத்திலுள்ள சண்டிகை
பீடமும், பிரபா சத்திலுள்ள இரதி பீடமும், சண்டமுண்டியிலுள்ள தண்டினி
பீடமும், பாரபூதியிலுள்ள பூதிபீடமும், நாகுலத்திலுள்ள நகுலேச்சுவரி பீடமும்,
அரிச்சந்திரத்திலுள்ள சந்திரிகை பீடமும், திரிசூல பீடமும், ஆம்பிராத
கேச்சுவரத்திலுள்ள சூக்கும பீடமும்; மகாகாளத்திலுள்ள சாங்கரி பீடமும்,
மத்திய மாபிதத்திலுள்ள சர்வாணி பீடமும், கேதாரத்திலுள்ள மார்க்க தாயினி
பீடமும், வைரவத்திலுள்ள பைரவி பீடமும், கயையிலுள்ள மங்கள பீடமும்,
குருட்சேத்திரத்திலுள்ள தாணுப்பிரியை பீடமும், வியபிநாகுலத்திலுள்ள
சவாயம்பு பீடமும், கனகலத்திலுள்ள உக்கிர பீடமும், விமலேச் சுவரத்திலுள்ள
விசுவேசை பீடமும், அட்டகாசத்திலுள்ள மகானந்த பீடமும்,
மகேந்திரத்திலுள்ள மகாநத்கைப் பீடமும், பீமத்திலுள்ள பீம பீடமும்,
வத்திராபதத்திலுள்ள பவானி பீடமும், அர்த்த கோடிகையிலுள்ள
உருத்திராணி பீடமும், அவிமுத்தத்திலுள்ள விசாலாட்சி பீடமும்,
கைலாயத்திலுள்ள மகாபாகை பீடமும், கோகன்னத்திலுள்ள பத்திரகாளி
பீடமும், பத்திர கன்னிகத்திலுள்ள பத்திரை பீடமும், சுவர்னாட்சத்திலுள்ள
உற்பலாட்சி பீடமும், தாணுவிலுள்ள தாண்வீசை பீடமும், கமலாலயத்திலுள்ள
கமலை பீடமும், சகண்டலத்திலுள்ள பிரசண்டை பீடமும், குரண்டலத்திலுள்ள
திரி சந்திரிகை பீடமும், மாகோட்டத்திலுள்ள மகுடேச்சுவரி பீடமும்,
மண்டலேசத்திலுள்ள சாண்டகை பீடமும், காலஞ் சரத்திலுள்ள காளி பீடமும்,
சங்கு கன்னத்திலுள்ள தொனி பீடமும், தூலகேச்சுவரத்திலுள்ள தூல பீடமும்,
ஞானிகளிதயகமலத்திலுள்ள பரமேச்சுவரி பீடமுமாம், இவற்றை
வடமொழியிலுற்ற தெவிபாகவதத்தில் காண்க. (68)
அல்லு மெல்லும்வா
னகர்க்கத வடைப்பின்றிச் சுவர்க்கச்
செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை
வெல்லு வாரதான் றெந்தையோ டைவர்கள் வேண்டி
நலவ ரம்பல வடைந்தனர் நமர்களந் நகரில் |
|