I


34திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்ன - இனிய திருவருளைச் சுரந்திடுதல் போல, கௌவை நீர் சுரந்து
எழுந்தன - ஒலிக்கின்ற நீரைச் சுரந்து மேலெழுந்தன எ - று.

     ‘நீறணிந்த கடவுணிறத்தவான்’ என்றார் கம்பரும். மேய்ந்து - பருகி;
‘கலங்குதெண்டிரை மேய்ந்து’ என்று திருத்தக்கதேவரும், ‘ஆர்கலிமேய்ந்து’
என்று கம்பரும் கூறுதல் காண்க. ஆற்றுவான் எனவும் பிரித்தலமையும்.
பல்லுயிர்க்கும் எவ்வமாற்றுவான் நீர் சுரந்து எனவும் கூட்டிக்கொள்க. ஈண்டு
எவ்வமாவது ஞாயிற்றின் வெம்மையும் உணவுன்மையும் ஆம். உமையுடன்
கூடிய இறைவன் சுரந்திடும் இன்னருளென்க;

". . . . . . . . . . நந்தம்மை யாளுடையாள்
     தன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு
முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
     யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்"

என்னும் திருவாசகமும் காண்க. (2)

இடித்து வாய்திறந் தொல்லென வெல்வொளி மழுங்கத்
தடித்து வாள்புடை விதிர்த்துநின் றிந்திர சாபம்
பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர்
முடித்து நாமென வருதல்போல் மொய்த்தன கொண்மூ.

     (இ - ள்.) ஒல்லென வாய் திறந்து இடித்து - ஒல்லென்று வாயைத்
திறந்து முழங்கி, எல் ஒளி மழுங்க - சூரியன் ஒளியும் மழுங்கும் வண்ணம்,
தடித்து வாள்புடை விதிர்த்து நின்று - மின்னலாகிய வாட்படையைப்
பக்கங்களில் அசைத்து நின்று, இந்திர சாபம் பிடித்து - இந்திர வில்லை
ஏந்தி, நீள் அம்பு - நீண்ட நீராகிய அம்பினை, கோடைமேல் பெய்து -
கோடையாகிய பகையின்மீது சொரிந்து, வெம்பெரும் போர் - வெவ்விய
பெரிய போரினை, முடித்தும் நாம் என - நாம் முற்றுவிப்போமென்று,
வருதல் போல் - வருவதைப்போல், கொண்மூ மொய்த்தன - மேகங்கள்
நெருங்கின எ - று.

     ஒளியும் என்னுஞ் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. தடித்து -
மின்னல். அம்பு - நீர், கணை. இந்திரசாபமாகிய வில் என்றும் நீராகிய
கணை என்றும் உரைக்க. கோடையைப் பகையென்னாமையால் இஃது
ஏகதேசவுருவகம். (3)

முனித னீள்வரை யுச்சிமேன் முழங்டிகவா னிவந்து
தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன்
கனித னீர்மையா லாலவாய்க் கண்ணுதன் முடிமேற்
புனித நீர்த்திரு மஞ்சன மாட்டுவான் போலும்.

     (இ - ள்.) தனிதம் - மேகங்கள், முனிதன் - அகத்திய
முனிவருடைய, நீள்வரை உச்சிமேல் - உயர்ந்த பொதியின் மலையினுச்சியில்
முழங்கி - குமுறி வான்நிவந்து - வானின்கண் உயர்ந்து, நீர்மழை பொழிவன
- நீராகி மழையைப் பொழிதல், தடசிலை இராமன் பெரிய கோதண்டம்
என்னும்