I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்345



குழிய நுழைமெல் லிளங்குழற் குதலைத்
     தொண்டைவா யகவைமூன் றெய்தி
வாழிளங் குழவி யாகியா லயத்து
     வந்துநின் றாள்வரங் கொடுப்பாள்.

     (இ - ள்.) யாழ் இயல் மொழியால் - யாழில் அமைந்த இசைப்
பாட்டால், இவ்வழிபாடி ஏத்தினாள் ஆக - இங்ஙனம் பாடித் துதிக்க, மெய்
உள்ளத்து ஆழிய அன்பின் வலைப்படு - உண்மையுடைய உள்ளத்தின் கண்
ஆழ்ந்த அன்பாகிய வலையில் அகப்படுகின்ற, கருணை அங்கயற்கண்
மடமான் - கருணையுடைய இளமானைப் போன்ற அங்கயற் கண்ணம்மை,
ஓர் - ஒரு, சூழியம் நுழை மெல் இளங்குழல் - கொண்டை யணி பொருந்திய
மெத்தென்ற சிறிய கூந்தரையும், குதலை - மழலைச் சொல்லையும், தொண்டை
வாய் - கொவ்வைக் கனிபோன்ற வாயினையும் உடைய, மூன்று அகவை
எய்தி - மூன்று ஆண்டினைப் பொருந்தி, வாழ் இளங் குழவியாகி -
விளங்குகின்ற இளமையாகிய பெண்மகவாகி, வரம் கொடுப்பாள் ஆலயத்து
வந்து நின்றாள் - (விச்சாவதி வேண்டிய) வரத்தை யளித்தற் பொருட்டுத்
திருக்கோயிலின்கண் வந்து நின்றருளினாள் எ - று.

     மொழி : பாட்டிற்கு ஆகு பெயர். ஏத்தினாள் என்னும் வினைமுற்றுடன்
ஆக என்னும் இடைச்சொற் சேர்ந்து எச்சப்படுத்தது. ஆழிய - ஆழமாகிய :
பெயரெச்சம். வலைப்படு என்றதற் கேற்க மான் எனக் கூறிய நயம்
பாரட்டற்பாலது, ஓர் குழவியாகி யென்க. சூழியம் - குழற்சூட்டு.
வாயினையுமுடைய குழவி, எய்திவாழ் இளங்குழவி எனத் தனித்தனி கூட்டுக.
கொடுப்பாள் - கொடுக்க : எச்சம். நின்றாள் என்பதனை யெச்சமாகக்கலும்
ஒன்று. (79)

இறைஞ்சியஞ் சலித்தா டன்னையெம் மன்னை
     யாதுவேண் டினையென வென்று
நிறைந்தபே ரன்பு நின்னடிப் போதி
     னீங்கலா நிலைமைதந் தருளென்
றறைந்தன ளின்னும் வேண்டுவ தேதென்
     றருளவிம் மகவுரு வாகிச்
சிறந்துவந் தென்பா லருள்சுரந் திருக்கத்
     திருவுளஞ் செய்யெனப் பணிந்தாள்.

     (இ - ள்.) இறைஞ்சி அஞ்சலித்தாள் தன்னை - வணங்கிக் கை
குவித்து நிற்கும் விச்சாவதியை (நோக்கி), எம் அன்னை - எம் திருத்
தாயாகிய மீனாட்சியம்மை, யாது வேண்டினை என - நீ எதனை விரும்பினாய்
என்று கேட்க, நின் அடிப் போதில் நிறைந்த பேர் அன்பு என்றும் நீங்கலா
நிலைமை தந்தருள் என்று அறைந்தனள் - நினது திருவடி மலரின்கண்ள
நிறைந்த பேரன்பானது எப்பொழுதும் நீங்காத நிலைமையினைத் தந்தருள
வேண்டுமென்று வேண்டினள்; இன்னும் வேண்டுவது ஏது என்று அருள -
இன்னும் நீ விரும்பியது யாது என்று வினவி யருள, இம்மகவு உருவாகி -
இக்காட்சி தந்த குழந்தை யுருவாய்,