சிறந்து வந்து என்பால்
அருள் சுரந்து இருக்க - சிறப்புடன் என்னிடந்
தோன்றிக்கருணை கூர்ந்திருக்குமாறு, திருவுளம் செய்யெனப் பணிந்தாள் -
திருவுளஞ் செய்ய வேண்டு மென்று வணங்கினாள் எ - று.
போதின்
நிறைந்த வெனக் கூட்டுக. நீங்கலா : எதிர்மறைப்
பெயரெச்சம்; அல் : எதிர்மறை யிடைநிலை; ஆ : சாரியை. சிறந்து
- சிறக்க. (80)
சிவபரம் பரையு மதற்குநேர்ந் தருள்வா
டென்னவர் மன்னனாய் மலயத்
துவசனென் றொருவன் வருமவன் கற்பின்
றுணைவியாய் வருதியப் போதுன்
தவமக வாக வருவலென் றன்பு
தந்தனள் வந்தவா றிதுவென்
றுவமையில் பொதியத் தமிழ்முனி முனிவர்க்
கோதினா னுள்ளவர் றுணர்ந்தார். |
(இ
- ள்.) சிவபரம்பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் - சிவ
சத்தியாகிய அங்கயற்கண்ணம்மையும் அவ் வேண்டுகோளுக்கு உடன் பட்டு
அருள் செய்கின்றவள், தென்னவர் மன்னனாய் மலயத்துவசன் என்று ஒருவன்
வரும் - பாண்டியர் குலத்து மன்னனாகிய மலயத்துவச னென்பான் ஒருவன்
இங்கு வந்து தோன்றுவான். அவன் கற்பின் துணைவியாய் வருதி - நீ
அவனுடைய கற்பின்மிக்க மனைவியாய் வருவாய், அப்போது உன் தவமகவு
ஆக வருவல் என்று அன்பு தந்தனள் - அது காலை உன் தவப்புதல்வியாக
வருவேன் என்று கருணைசெய்தாள், வந்தவாறு இது என்று - அம்மை
பாண்டியனிடம் புதல்வியாக வந்த முறைமை இது என்று, உவமை இல்
பொதியத் தமிழ்முனி - ஒப்பில்லாத பொதியின் மலையையுடைய அகத்திய
முனிவன், முனிவர்க்கு ஓதினான் - முனிவர்களுக்குக் கூறினான்; உள்ளவாறு
உணர்ந்தார் - அவர்களும் உள்ளபடி உணர்ந்தார்கள் எ - று.
பரம்பரை
- சத்தி. வருதி - வருவாய் : இ எதிர்கால விகுதி; த் :
எழுத்துப் பேறு. அன்பு தந்தனள் - அருள் புரிந்தாள். உவமையில் தமிழ்
முனியென்க; தமிழ் முனி : பெயர். (81)
ஆகச் செய்யுள் - 598.
|