I


348திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     பரிதி - ஆக்கினா சக்கரமும் ஆதித்தனும் ; இரட்டுற மொழிதல்.
சக்கரம் காய்தலாவது, பகைவரையும் கொடியோரையும் ஒறுத்தல். ஒளி -
புகழ்; நிழலாகிய ஒளியெனினுமாம். நீழல், நீட்டல். மாயிரு :
உரிச்சொல்லாகலின் யகர உடம்படு மெய் வந்தது. அரச பத்தினிகள் தம்
கணவரோடு அரியனை யமர்ந்து அரசாளு முரிமை யுடையவர்; இவர்
அங்ஙனமின்றித் தனியாக விருத்தலைக் கருதித் ‘தனியர சிருக்கும்’ என்றார்.
பொதுவின்றி அரசாளுதல் எனினுமாம். (2)

மருங்குறேய்ந் தொளிப்பச் செம்பொன்
     வனமுலை யிறுமாப் பெய்தக்
கருங்குழற் கற்றை பானாட்
     கங்குலை வெளிறு செய்ய
இரங்குநல் யாழ்மென் நீஞ்சொ
     லின்னகை யெம்பி ராட்டிக்
கரூங்கடி மன்றல் செய்யுஞ்
     செவ்விவந் தடுத்த தாக.

     (இ - ள்.) மருங்குல் தேய்ந்து ஒளிப்ப - இடையானது தேய்ந்து
மறையுமாறு, செம்பொன் வனம் முலை இறுமாப்பு எய்த - சிவந்த
பொன்னிறம் வாய்ந்த அழகிய கொங்கைகள் பணைத்து அண்ணாந்
திருக்கவும், கருங் குழல் கற்றை - கரிய கூந்தற்கற்றை, பால் நாள் கங்குலை
வெளிறு செய்ய - நள்ளிரவின் கருமையை வெண்ணிறஞ் செய்யவும், இரங்கும்
நல்யாழ் மென் தீஞ்சொல் இன் நகை எம்பி ராட்டிக்கு - ஒலிக்கின்ற நல்ல
யாழின் இசைபோன்ற மெல்லியஇனிய சொல்லையும் அனிய
புன்முறுவரையுமுடைய எம் பிராட்டியாருக்கு, அருங்கடி மன்றல் செய்யும்
செவ்வி வந்து அடுத்தது ஆக - அரிய திருமணம் செய்யும் பருவமானது
வந்து பொருந்த எ - று.

     ஒளிக்குமாறு இறுமாப் பெய்த. வனம் - தொய்யிலுமாம். கங்குலும்
வெளிறென்னுமாறு கரிதாக. யாழ் இரங்குந் தன்மையுடைய வென்றுமாம்.
கடிமன்றல் : ஒருபொரு ளிருசொல் : விளக்கமமைந்த மன்றலுமாம். (3)

பனிதரு மதிக்கொம் பன்னன பாவையைப் பயந்தா ணோக்கிக்
குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க் கின்னுங் கன்னி
கனிதரு செவ்வித் தாயுங் கடிமணப் பேறின் றென்னாத்
துனிதரு நீரளாகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள்.

     (இ - ள்.) பனிதரு மரி கொம்பு அன்ன பாவையை - குளிர்ந்த
சந்திரனை யேந்திய கொம்பினை ஒத்த பிராட்டியாரை, பயந்தாள் நோக்கி -
பெற்ற காஞ்சனமாலை பார்த்து, குனிதர நிறையப் பூத்த கொம்பு அன்னாய்க்கு
- வளையுமாறு நிறைய மலர்ந்த பூங்கொம்பினைப் போன்ற உனக்கு, கன்னி
கனி தரு செவ்வித்து ஆயும் - கன்னிப் பருவமானது முதிர்ந்த
செவ்வியுடையதாகியும், இன்னும் கடிமணப் பேறு இன்று என்னா - இன்னமும்
திருமணமாகிய பேறு கூடிற்றில்லையே என்று, துனிதரு நீரளாகிச்