சொல்லினாள் - வருந்துந்
தன்மையை உடையவளாய்க் கூறினாள்; சொல்லக்
கேட்டாள் - பிராட்டியார் அங்ஙனம் கூறுவதைக் கேட்டார் எ - று. எல்லா
வுறுப்புக்களும் குறைவின்றி நிறைந்தன வென்னும் குறிப்புத் தோன்ற நிறையப்
பூத்த கொம்பு என்றார். கொம்பனாய், பெயர். செவ்வித்து என்பதில் து :
பகுதிப்பொருள் விகுதியுமாம். கடி, மணம் : ஒரு பொருளன; கடி மன்றல்
போல. கேட்டாள் : பெயருமாம். (4)
அன்னைநீ
நினைந்த வெண்ண
மாம்பொழு தாகும் வேறு
பின்னைநீ யிரங்கல் யான்போய்த்
திசைகளும் பெருநீர் வைப்பும்
என்னது கொற்ற நாட்டி
மீள்வலிங் கிருத்தி* யென்னாப்
பொன்னவிர் மலர்க்கொம் பன்னாள்
பொருக்கென வெழுந்து போனாள். |
(இ
- ள்.) அன்னை - தாயே, நீ நினைந்த எண்ணம் ஆம்பொழுது
ஆகும் - நீ எண்ணிய எண்ணம் முடியுங் காலத்து முடியும்; பின்னைநீ வேறு
இரங்கல் - பின்பு நீ பல்வேறாகக் கருதி வருந்தற்க; யான் போய் - நான்
சென்று, திசைகளும் - எட்டுத் திக்குகளிலும், பெருநீர் வைப்பும் - கடல்
சூழ்ந்த இந்நிலவுகத்திலும், என்னது கொற்றம் நாட்டி மீள்வல் - என்னுடைய
வெற்றியை நாட்டி வருவேன்; இங்கு இருத்தி என்னா - நீ இங்கு இருப்பாய்
என்று கூறி, பொன் அவிர் மலர்க்கொம்பு அன்னாள் - பொன்போலும்
விளங்கும் மலர்களை யுடைய கொம்பினை ஒத்த பிராட்டியார், பொருக்கென
எழுந்து போனாள் - விரைந்து எழுந்து சென்றார் எ - று.
வேறு
- பிறிதாக வென்றுமாம். இரங்கல் : எதிர்மறை வியங்கோள்;
மகனெனல் என்புழிப்போல. பெருநீர் - கடல்; பெருநீ ரோச்சுநர், பெருநீர்
போகும் இரியன் மாக்கள் எனவுள்ள மேற் கொள்களுங் காண்க. என்னது :
னகரம் விரித்தல். பொருக்கென : விரைவுக் குறிப்பு. (5)
தேம்பரி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி
ஆம்பரி சுணர்ந்த வேந்த ரமைச்சரும் பிறரும் போந்தார்
வாம்பரி கடாவித் திண்டேர் வலவனுங் கொணர்ந்தான்வையந்
தாம்பரி வகல வந்தா ளேறினாள் சங்க மார்ப்ப. |
(இ
- ள்.) தேம்பரி கோதை மாதின் திருவுளச் செய்தி நோக்கி -
மணமிக்க மாலையையணிந்த பிராட்டியாரின் திருவுள்ளக் குறிப்பை நோக்கி.
ஆம் பரிசு உணர்ந்த வேந்தர் - ஆக்க முண்டாகுந் தன்மையை
(பா
- ம்.) * நாட்டி யீண்டுவ லிருத்தி.
|