I


திருநாட்டுச் சிறப்பு35



வில்லையுடைய இராமபிரான், கனிதல் நீர்மையால் - கனிதற் றன்மையோடு,
ஆலவாய் - திருவாலவாயின்கண் வீற்றிருக்கும், கண்ணுதல் - நெற்றிக்
கண்ணையுடைய இறைவனது, முடிமேல் - திருமுடிமேல், புனிதம் நீர் -
தூய்மையான நீரால், திருமஞ்சனம் ஆட்டுவான்போலும் - திருமஞ்சனம்
செய்தலை ஒக்கும் எ - று.

     பொதியில் அகத்தியர்க்கு என்றும் உறைவிடமாதலின் முனி வரை
எனப்பட்டது; தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் றமிழச்சங்கஞ்
சேரு வீரேல், என்றுமவ னுறைவிடமாம்’ என்று கம்பரும் கூறினர். தனிதம்
- முழக்கம்; மேகத்திற்கு ஆகுபெயர். இராமன் சிவபெருமானுக்கு
கோயிலெடுத்துப் பூசனை புரிந்ததனைத் திருவிராமேச்சுரத் திருநேரிசையா
னறிக. மற்றும் பல திருப்பதிகளினும் அவன் வழிபட்டமை கேட்கப்படு
கின்றது. பொழிவன ஆட்டுவான் ஈண்டுத் தொழிற்பெயர்கள். நீர்மையால்,
ஆல் - ஓடுவின் பொருட்டு. (4)

சுந்த ரன்றிரு முடிமிசைத் தூயநீ ராட்டும்
இந்தி ரன்றனை யொத்ததா ரெழிலிதென் மலைமேல்
வந்து பெய்வவத் தனிமுதன் மௌலிமேல் வலாரி
சிந்து கின்றகைப் போதெனப் பன்மணி தெறிப்ப.

     (இ - ள்.) தென்மலைமேல் - பொதியின்மலைமேல், வந்து பெய்வ .
வந்து மழையைப் பெய்வனவாகிய, கார் எழிலி - கரிய மேகங்கள், சுந்தரன்
திருமுடிமிசை - சோமசுந்தரக் கடவுளின் திருமுடியின் கண்ணே, தூயநீர்
ஆட்டும் - தூய்மையான நீரால் அபிடேகஞ் செய்கின்ற, இந்திரன்தனை
ஒத்த - இந்திரனை ஒத்தன; அத் தனிமுதல் மௌலிமேல் - அந்த ஒப்பற்ற
முதற் கடவுளின் திருமுடிமேல், வலாரி - அவ்விந்தினானவன், கைசிந்துகின்ற
- கையினால் சொரிகின்ற, போது என - மலர்களைப்போல, பல்மணி -
பலவாகிய மணிகள், தெறிப்ப - (அம் மேகங்களினின்றும்) சிதறுவன எ - று.

     வலாரி - வலன் என்னும் அசுரனுக்குப் பகைவன்; இநதிரன். மணிகள்,
முகில்கள் கடலி னீருண்ணும்பொழுது அதனுடன் கலந்து வந்தன. இந்திரன்
பூசித்ததை இப்புராணத்து இந்திரன் பழிதீர்த்த படலத்தாறிக. (5)

உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகடன்
இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கைத்
தடத்து நின்றிழி பாலெனத் தடவரை முகடு
தொடுத்து வீழவன விழுமெனத் தூங்குவெள் ளருவி.

     (இ - ள்.) இழுமென - இழுமென்னு மொலியோடு, தூங்குவெள்
அருவி - ஒழுகுகின்ற வெள்ளிய அருளிகளானவை, உடுத்த -
உடுக்கப்பட்ட, தெண்கடல் - தெளிந்த கடலாகிய, மேகலை உடைய -
ஆடையினை யுடைய, பார்மகள் - புவிமடந்தையானவள், தன் இடத்து
உதித்த - தன்னிடத்துத் தோன்றிய, பல் உயிர்க்கு எலாம் - பலவகையான
உயிர்களெல்லாவற்றுக்கும், இரங்கி - இரக்கமுற்று, தன் கொங்கைத் தடத்து
நின்று - தனது கொங்கையிடத்தினின்றும் (சொரிய), இழிபால் என - பால்