I


310திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



குறுமுயல் கறையை மான - சிறிய முயலாகிய களங்கத்தை ஒக்கவும், அதில்
கட்டி நாற்றிய - அச்சூழியத்தில் கட்டித் தொங்க விட்ட, கதிர்த் தரள மாலை
- ஒளியினையுடைய முத்துமாலை, சுட்டியதில் - மேல் சுட்டப்பட்ட
சந்திரனினின்றும், விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப - விலகி வீழ்கின்ற
சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும் எ - று.

     சூழியம் - கொண்டையைச் சுற்றியணியும் முத்தானியன்ற அணி.
அதனாற் கவரப்பட்டுக் கொண்டை சிறிதே தோன்றிற்று. மதியினிடத்துள்ள
கறையை மானென்றும் முயலென்றும் கூறுதல் வழக்கு. சூழியத்திற்கு
வட்டமாகிய மதியும், கொண்டைக்கு அதனுட் களங்கமும், முத்துத்
தொங்கலுக்குக் கீழ்நோக்கிச் செல்லும் அதன் கிரணமும் உவமைகளாம்.
சுட்டி யென்பதனை ஓர் அணியாகக் கொண்டுரைப்பாருமுளர்;
பொருந்துமேற் கொள்க. (16)

தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.

     (இ - ள்.) தீங்குதலை இன் அமுதம் - இனிய குதலையுடன்கூடிய
இனிய அமுதமானது, மார்பின் வழ சிந்தியாங்கு - மார்பின் வழியாகச்
சிந்தியதுபோல, இளநிலா ஒழுகும் ஆரவடம் மின்ன - இளநிலவு சிந்தும்
முத்துமாலை ஒளிவிடவும், வீங்கு உடல் இளம்பரிதி - ஒளிமிக்க
வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெஞ்சுடர் விழுங்கி - வெப்பமாகிய
ஒளியை உண்டு, வாங்குகடல் வித்துருமமாலை ஒளிகால - வளைந்த
கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும் எ - று.

     குதலை - பொருளறிய வாராத இளஞ்சொல். அமுதம் - வாயூறல்;
பேசும் பொழுது ஊறல் ஓழுகுமாகலின் ‘குதலை யின்னமுதம்’ என்றார்.

"கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும்" என்றும்,
"துகிர்வா யூறுநீர் நனைமார்பி னோடு" என்றும்

பிறருங் கூறுதல் காண்க. குதலையாகிய அமுதம் என்றுரைப்பாருமுளர்.
சிந்தப் பெற்று அவ்விடத்து வடம் மின்ன என்றுரைத்தலுமாம். ஆரம் -
முத்து. வித்துருமம் - பவளம். (17)

சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட.

     (இ - ள்.) சிறுஇடை வளைந்த - சிறிய இடையைச்சூழ்ந்த. மென்
சிறுதுகில் புறம்சூழ் - மெல்லிய சிற்றாடையின் புறத்தே சூழப்பெற்ற, பொன்
திருமணி - பொன்னாலாகிய அழகிய மணிகள் பதித்த, சிறிய மேகலை
புலம்ப - சிறிய மேகலை ஒலிக்கவும், வில் திருமணிக் குழை - ஒளி
பொருந்திய அழகிய மாணிக்கக் குழையை, விழுங்கிய குதம்பை -
தன்னுட்படுத்திய குதம்பைகள், சுற்று இருள் கடிந்து - சூழ்ந்து இருளை