I


திருமணப் படலம்351



     ஆயத்தாா - மகளிருள் மெய்க்காவலராயினார். ஆயத்தாருட் சிலர்
கணையினரும், சிலர் தாங்கிய கையரும், சிலர் தளிர்க் கையருமாகி உடன்
ஏறினாரென்க. கச்சினர் என்பதனை யெல்லாவற்றொடும் ஒட்டுக. வட்டத்
தோல் - பரிசை; கேடகம். பிணாத்தெய்வம் - பெண் தெய்வம்; அழகு
மிக்கவரென்க; கொற்றவை போன்று வெற்றி மிக்காரென்றுமாம். (8)

கிடைப்பன வுருளாற் பாரைக் கீண்டுபா தலத்தி னெல்லை
அடைப்பன பரந்த தட்டா லடையவான் றிசைக ளெட்டும்
உடைப்பன வண்ட முட்டி யொற்றிவான் கங்கை நீரைத்
துடைப்பன கொடியாற் சாரி சுற்றுவ பொற்றிண் டேர்கள்.

     (இ - ள்.) சாரி சுற்றுவ பொன்திண் தேர்கள் - இடசாரி வலசாரி
யாகச் சுழலும் பொன்னாலாகிய திண்ணிய தேர்கள், கிடைப்பனஉருளால் -
பூண்டனவாய உருளைகளால். பாரைக் கீண்டு பாதலத்தின் எல்லை
அடைப்பன - நிலவுலகத்தைக் கிழத்துப் பாதலத்தின் எல்லையை
அடைப்பனவும். பரந்த தட்டால் - இடம் விரிந்த தட்டினால், வான் திசைகள்
எட்டும் அடைய உடைப்பன - பெரிய திக்குகள் எட்டினையும் முற்றும்
தகர்ப்பனவும், கொடியால் அண்டம் முட்டி ஒற்றிவான் கங்கை நீரைத்
துடைப்பன - கொடிகளால் அண்டத்தைப் பெரிது மளாவி வான் யாற்றின்
நீரை வற்றச்செய்வனவுமாயின எ - று.

     கிடைப்பன, கூற்றுவ முற்றெச்சங்கள். கீண்டு, கீழ்ந்து என்பதன் மரூஉ.
முட்டி, ஒற்றி யென்பன ஒரு பொருளன; அண்டத்தை முட்டி நீரை ஒற்றி
யென்றுமாம். தட்டால் அடைப்பன, முட்டி உடைப்பன, ஒற்றித் துடைப்பன
என வியைத்தலுமாம். (9)

செருவின்மா தண்டந் தாங்கிச் செல்லும்வெங் கூற்ற மென்ன
அருவிமா மதநீர் கால வரத்தவெங் குருதிக் கோட்டாற்
கருவிவான் வயிறு கீண்டு கவிழுநீர் வாயங் காந்து
பருகிமால் வரைபோற் செல்வ பரூஉப்பெருந் தடக்கை யானை.

     (இ - ள்.) பரூஉஙப பெருந் தடக்கை யானை - பருத்தலையுடைய
பெரிய கைகளையுடைய யானைகள், அருவி மா மதநீர் கால - அருவி
போலப் பெரிய மதநீர் பொழிய, அரத்தம் குருதி வெம் கோட்டால் - சிவந்த
உதிரந்தோய்ந்த கொடிய கொம்புகளால், கருவி வான் பயிறு கண்டு -
தொகுதியுடைய முகிலின் வயிற்றைக் கிழித்து, கவிழும் நீர் வாய் அங்காந்து
பருகி - (அதனால்) ஒழுகும் நீரை வாயைத் திறந்து உண்டு, செருவில் மா
தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன - போரில் பெரிய
தண்டினை ஏந்திச் செல்லுகின்ற கொடிய கூற்றுவனைப் போலவும், மால்
வரை போல் - பெரிய மலையைப் போலவும், செல்வ - செல்வன வாயின
எ - று.

     குருதிக் கோட்டுடன் கூடிய கொடுந் தோற்றத்தால் கூற்றம் போலவும்,
மதப் பெருக்குடன் கூடிய உயர்ந்த தோற்றத்தால் மலை போலவும்