யானைகள் பொலிந்தன
வென்றார். அரத்தம் - ஈண்டுச் செந்நிறம். கருவி :
மின் முதலியவற்றின் தொகுதி. செல்வ : அன்பெறாத பலவின்பால் முற்று.
பரூஉ - பருத்தல்;
"ழகர வுகர நீடிட
னுடைத்தே
உகரம் வருத லாவயி னான" |
என்னும் தொல்காப்பியச்
சூத்திரத்து ஒன்றென முடித்தலால் ரகர வுகரம்
நீண்டு உகரம் பெற்றதெனக் கொள்க. வரைபோற் செல்வ என்றது
இல்பொருளுவமையணி. (10)
ஒலியவார் திசையி னன்ன வொழுங்கின யோக மாக்கள்
வலியகா லடக்கிச் செல்லு மனமெனக் கதியிற் செல்வ
கலியநீர் ஞாலங் காப்பான் கடையுக முடிவிற் றோற்றம்
பொலியும்வாம் புரவி யொன்றே போல்வன புரவி வெள்ளம். |
(இ
- ள்.) கலிய நீர் ஞாலம் காப்பான் - ஒலியினையுடைய கடல்
சூழ்ந்த வுலகைக் காக்கும் பொருட்டு, கடையுகம் முடிவில் தோற்றம்
பொலியும் - கலியுக இறுதியில் தோன்றும், வாம் புரவி ஒன்றே போல்வன
புரவி வெள்ளம் - தாவுகின்ற குதிரை ஒன்றையே ஒத்தனவாய குதிரைக்
கூட்டங்கள், ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின - ஒலியினையுடைய
நண்ட அலைகளை யொத்த ஒழுங்கினையுடையனவும், யோகமாக்கள் வலிய
கால் அடக்கிச் செல்லும் மனம் என - யோகிகள் வலியகாற்றை அடக்கி
(ஒருவழிபடச்) செலுத்தச் செல்லும் மனம் போல, கதியில் செல்வ - (பாகர்
தம் வசப்படுத்திச் செலுத்த ஒரு வழிப்பட்டு) விரைவிற் செல்வனவுமாயின
எ - று.
ஒலிய,
கலிய என்பவற்றில் அ : அசை. திரையின், இன் : சாரியை.
கால் - காற்று; பிராணவாயு. கால் அடக்கல் - பிராணாயாமம் செய்தல்.
செலுத்த வென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. கதியிற் செல்லுதல் -
நடத்தப்படு நெறியில் விரைந்து செல்லுதல். ஞாலங் காத்தல் - உலகைத்
தீமையி னீக்கிக் காத்தல். திருமாலின் கடைசியவ தாரமாகிய குதிரை; கற்கி.(11)
காலினுங் கடிது செல்லுஞ் செலவினர் கடுங்கட் கூற்ற
மேலினு மிகையுண் டாயின் வெகுண்டுவென் கண்டு மீளும்
பாலினர் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு மால
வேலினர் வீயா வென்றி வீக்கிய கழற்கால் வீரர். |
(இ
- ள்.) வியா வென்றி வீக்கிய கழல் கால் வீரர் - கெடாத
வெற்றியினையும் கட்டப்பட்ட வீரகண்டையையுடைய காலினையு முடைய
வீரஙாகள், கடுங்கண் கூற்றம் மேலினும் மிகை உண்டாயின் -
தறுகண்மையையுடைய கூற்றுவன்மேலும் குற்றம் உளதாயின், வெகுண்டு
வென் கண்டு ளும் பாலினர் - சினந்து புறங்கண்டு வருந்
தன்மையையுடையவரும், பகுவாய் நாகப் பல்லினும் பில்கும் ஆல வேலினர்
- பிளந்த வாயினையுடைய பாம்பின் பல்லைவிடச் சிந்தும் நஞ்சினையுடைய
வேற்படையையுடையவரும், காலினும் கடிது செல்லும் செலவினர் - காற்றினும்
விரைந்து செல்லும் செலவினையு முடையராயினர் எ - று.
|