I


354திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     பாய்மான் - குதிரை. செலவு - செல்கை. அடைகளால் கார் யானையை
யுணர்த்திற்று. கனை - செறிவு. வல்திண் : ஒருபொருட் பன் மொழி. பெருத்த
: பண்படியாகப் பிறந்த அன்பெறாத பலவின்பால் வினைமுற்று. (14)

பரந்தெழு பூமி போர்ப்பப் பகலவன் மறைந்து முந்நீர்க்
கரந்தவன் போன்றா னாகக் கங்குல்வந் திறுத்த தேய்ப்பச்
சுரந்திரு ணிறைய முத்தின் சோதிவெண் குடையும் வேந்தர்
நிரந்த பூண் வயிர வாளு நிறைநிலா வெறிக்கு மன்னோ.

     (இ - ள்.) பரந்து எழு பூமி போர்ப்ப - (இவற்றால்) பரவி மேலெழுந்த
புழுதி மறைத்தலால், பகலவன் மறைந்து முந்நீர் கரந்தவன் போன்றான் ஆக
- சூரியன் மறைந்து கடலில் ஒளித்தவன் போலாக, கங்குல் வந்து இறுத்தது
ஏய்ப்ப - (அதனால்) இரவு வந்து தங்கியதை ஒக்க, சுரந்து இருள் நிறைய -
மிகுந்து இருளானது நிறைய, சோதிமுத்தின் குடையும் - ஒளியினையுடைய
முத்துக் குடைகளும், வேந்தர் பூண் நிரந்த வயிரவாளும் - மன்னர்களின்
பூண் அமைந்தவயிரத்தாற் செய்த வாட் படைகளும், நிறை நிலா எறிக்கும் -
(அவ்விருளைப் போக்க) மிக்க நிலவை வீசும் எ - று.

     பூழி - புழுதி. முந்நீர் - மூன்று நீர்மையுடையதென்றும், மூன்று
நீரினையுடையதென்றும் கூறுப : முன் உரைத்தாம். இறுத்தது - தங்கினமை :
தொழிற் பெயர். அணிகலன்களும் வாளும் என்னலுமாம். மன்னும், ஓவும்
அசை நிலைகள். (15)

தேர்நிரை கலனாய்ச் செல்லப் பரிநிரை திரையாய்த் துள்ள
வார்முர சொலியாய்க் கல்ல வாட்கலன் மீனாய்க் கொட்பத்
தார்நிரை கவரிக் காடு நுரைகளாய்த் ததும்ப வேழங்
கார்நிரை யாகத் தானைக் கடல்வழிக் கொண்ட தன்றே.

     (இ - ள்.) தேர் நிரை கலனாய்ச் செல்ல - தேரின வரிசைகள்
மரக்கலங்களாய்ச் செல்லவும், பரி நிரை திசையாய்த் துள்ள - குதிரையின்
வரிசைகள் அலைகளாய்த் துள்ளவும்; வார் முரசு ஒலியாக் கல்ல - வார்க்
கட்டினையுடைய முரசின் ஒலி கடலொலியாய் ஒலிக்கவும், வாள் கலன்
மீனாய்க் கொட்ப - வாட்படைகள் மீனாய்ச் சுழன்று விளங்கவும், தார் நீரை
கவரிக்காடு - (வெண்மலர்) மாலை வரிசைபோன்ற சாமரைக் காடு,
நுரைகளாய்த்ததும்ப - நுரைகளாய் மேலெழவும், வேழம் நிரைகார் ஆக -
யானையின் வரிகைகள் (கடலினீ ருண்ணவரும்) முகில்களாகவும், தானைக்
கடல் வழிக்கொண்டது - (இவ்வாறு) சேனைக்கடலானது வழி நடந்தது எ-று.

     முரசு : அதஙன ஒலிக்கு ஆகுபெயர் : கல்ல - ஒலிக்க : கலிக்க
என்பதன் விகாரம்; கலி : பகுதி; கல்லென என்பதன் விகாரமுமாம். அவயவ
அவயவிகள் முழுதும் உருவகஞ் செய்யப்பட்டமையால் இது முற்றுருவகவணி. (16)