கள்ளவிழ் கோதை மாத ரெடுத்தெறி கவரிக் காடு
துள்ளவந் தணர்வா யாசி யொருபுறந் துவன்றி யார்ப்பத்
தெள்விளி யமுத கீத மொருபுறந் திரண்டு விம்ம
வள்ளைவார் குழையெம் மனன மணித்திண்டேர் நடந்த தன்றே. |
(இ
- ள்.) கள் அவிழ் கோதை மாதர் - தேனொடு மலர்ந்த
மாலையை யணிந்த மகளிர், எடுத்து எறி கவரி காடு துள்ள - எடுத்து
வீசுகின்ற கவரிக்காடு (ஒருபால்) துள்ளவும், அந்தணர்வாய் ஆசி ஒரு புறம்
துவன்றி ஆர்ப்ப - மறையவர் வாயாற் கூறும் வாழ்த்து மொழிகள் ஒருபால்
மிக்கொலிக்கவும், அமுத தெள்விளி கீதம் ஒருபுறம் திரண்டு விம்ம -
அமுதம் போன்ற தெளிந்த ஓசையையுடைய இசைப்பாட்டுக்கள் ஒருபால்
திரண்டொலிக்கவும், வள்ளை வார் குழை எம் அன்னை - வள்ளைத்தண்டு
போன்ற நீண்ட காதினையுடைய எம் அன்னையாகிய தடாதகைப்
பிராட்டியாரின், மணி திண் தேர் நடந்தது - மணிகள் அழுத்திய வலிய
தேரானது சென்றது எ - று.
மிகுதியை
யுணர்த்தக் காடு என்றார். தெள் விளி - தெளிந்த ஓசை;
"ஆம்பலந் தீங்குழற்
றெள்விளி பயிற்ற" |
என்னும் குறிஞ்சிப்பாட்
டடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.
இவ்வரு செய்யுளிலும் அன்றும், ஏயும் அசைகள். (17)
மீனவன் கொடியுங் கான வெம்புலிக் கொடியும் செம்பொன்
மானவிற் கொடியும் வண்ண மயிற்றழைக் காடுந் தோட்டுப்
பானலங் கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தோணிம்பத்
தேனலம் பலங்கல் வேய்ந்த செல்விதேர் மருங்கிற் செல்ல. |
(இ
- ள்.) வல் மீனக் கொடியும் - வலிய மீனக்கொடியும், கானம்
வெம்புலிக் கொடியும் - காட்டிலுள்ள கொடிய புலி எழுதிய கொடியும்,
செம்பெபன் மான வில் கொடியும் - சிவந்த பொன்னாலாகிய பெரிய
விற்கொடியும், வண்ணம் மயில் தழைக்காடும் - அழகிய மயிற் பீலிக்
(குடைக்) கூட்டமும், தோட்டுப் பானல் அம் கருங்கண் - இதழையுடைய
நீலோற்பல மலர்போன்ற அழகிய கரிய கண்களையும், செவ்வாய் சிவந்த
வாயையும், வெள் நகை - வெள்ளிய பற்களையும், பசுந்தோள் - பசிய
தோள்களையுமுடைய, தேன் அலம்பு நிம்ப அலங்கல் வேய்ந்த - வண்டுகள்
ஒலிக்கும் வேப்பமலர் மாலையையணிந்த, செல்விதேர் மருங்கில் செல்ல -
பிராட்டியாரின் தேரின் பக்கத்திற் செல்லாநிற்கவும் எ - று.
மீன்
புலி வில் : இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக்
கொடிகள்; மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய
கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலியவற்றையும்
அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு;
"வடதிசை
மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென" |
|