எனச் சிலப்பதிகாரத்து
வருதலுங் காண்க. நிம்ப அலங்கல் எனக் கூட்டுக. மூன்றாமடியில் முரண் என்னும் அணியமைந்துள்ளது.
(18)
மறைபல முகங்கொண்
டேத்தி வாய்தடு மாறி யெய்ப்ப
நிறைபரம் பரைநீ யெங்க ணிருபர்கோன் மகளாய் வையம்
முறைசெய்து மாசு தீர்ப்பா யடியனேன் முகத்து மாசுங்
குறையென நிழற்றுந் திங்கட் கொள்கைபோற் கவிகை காப்ப. |
(இ
- ள்.) மறை பல முகம் கொண்டு ஏத்தி - வேதங்கள் பல
முகங்களால் துதித்தம் (காணமாட்டாமையின்), வாய் தடுமாறி எய்ப்ப - வாய்
தடுமாறி இளைக்குமாறு, நிறை பரம்பரை நீ எங்கும் நிறைந்த சிவசத்தியாகிய
நீ, எங்கள் நிருபர்கோன் மகளாய் - எம் வழித்தோன்றலாகிய மன்னர்
மன்னனாம் மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய் வந்து, வையம்
முறைசெய்து - பூமியில் செங்போலோச்சி, மாசு தீர்ப்பாய் - குற்றத்தைப்
போக்குகின்றாய் (அதுபோல), அடியனேன் முகத்து மாசும் குறை என -
அடியேனுடைய முகத்திலுள்ள களங்கத்தையும் ஒழித்தருள் என்று, நிழற்றும்
திங்கள் கொள்கைபோல் - நிழலைச் செய்கின்ற சந்திரனது கொள்கை போல,
கவிகை காப்ப - வெண் கொற்றக் குடை நிழல் செய்யவும் எ - று.
பலமுகம்
- பல சாகைகள். எங்கள் என ஒருமையிற் பன்மை கூறினார்;
அயன் படைப்பிலும், திருமால் உளத்திலும், அங்கியின் முகத்திலும், அத்திரி
விழியிலும், பாற்கடலிலும் தோன்றிய ஐவகை மதியையுங் கருதிச்
சொன்னாரெனினுமாம். பாண்டியர் திங்கண் மரபின ராகலின் இங்ஙனங்
கூறினார். நிழற்றுவதாகிய கொள்கை : இது தற்குறிப்பேற்றவணி.
(19)
அங்கய னோக்கி மான்றேர்க் கணித்தொரு தடந்தே ரூர்ந்து
வெங்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன்
நங்கைதன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையஞ் செல்லச்
செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல. |
(இ
- ள்.) வெம் கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என் போன்
- விரும்பும் ஒளியினையுடைய வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த
சூழ்ச்சியினையுடைய சுமத என்னும் முதலமைச்சன், அம் கயல் நோக்கிமான்
தேர்க்கு - அழகிய கயல்போலுங் கண்களையுடைய பிராட்டியாரின் தேருக்கு,
அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து - அணித்தாக ஒரு பெரிய தேரினைச்
செலுத்தி, நங்கைதன் குறிப்பு நோக்கி - அப்பிராட்டியாரின் குறிப்பினை
ஆராய்ந்து நால் பெரும்படையும் செல்ல - பெரிய நால்வகைச் சேனைகளும்
செல்லுமாறு, செம் கையில் பிரம்பு நீட்டி - சிவந்த கையிலுள்ள பிரம்பினாற்
சுட்டிக் காட்டி, சேவகம் செலுத்திச் செல்ல - சேவகத்தைச் செலுத்திச்
செல்லா நிற்பவும் எ - று.
அணித்து
- அணியதாக. வெம்மை - விருப்பம். வியாழன் - பிருகற்
பதி; தேவர்க்கு அமைச்சுப் பூண்டவ னென்பதுபற்றி யெடுத்துக் கூறினார்.
சூழ்ச்சியினும் என உருபும் உம்மையும் விரிக்க சேவகம் - வீரமும்,
பணியுமாம். இங்கே படையினைப் பணிகொள்ளுதலாகிய வீரமும்,
பிராட்டிக்குப் பணிசெய்தலாகிய தொண்டும் கொள்க. (20)
|