அலகினாற் கருவிச் சேனை யாழ்கட லனைத்துந் தன்போல்
மலர்தலை யுலக மன்றி மகபதி யுலக மாதி
உலகமும் பிறவுஞ் செல்ல வுலப்பிலா வலிய தாக்கித்*
திலகவா ணுதலாண் மன்னர் திருவெலாங் கவரச் செல்வாள். |
(இ
- ள்.) அலகு இல் - அளவில்லாத, நால் கருவிச் சேனை ஆழ்
கடல் அனைத்தும் - நால்வகைப் படையாகிய கடல் முழுதையும், தன்
போல் - தன்னைப்போல், மலர்தலை உலகம் அன்றி - பரந்த
இடத்தினையுடைய இந்நிலவுலகையல்லாமல், மகபதி உலகம் ஆதி உலகமும்
- இந்திரன் உலகம் முதலிய உலகங்களிலும், பிறவும் செல்ல -
பிறவிடங்களினும் செல்லுமாறு, உலப்பு இலா வயிது ஆக்கி - அழியாத
வலிமையுடையதாகச் செய்து, திலக வாள் நுதலாள் - திலகமணிந்த
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தடாதகைப் பிராட்டியார், மன்னர் திரு
எலாம் கவரச் செல்வாள் - அரசர்களின் செல்வங்களனைத்தையும் கொள்ளை
கொள்ளப் பேரவாராயினர் எ - று.
சேனையைக்
கருவியாக்கிக் கருவிச்சேனை என்றார். தொகுதி யாகிய
சேனையுமாம். ஆழ் என்றது கடலுக்கு இயற்கையடை. தன் போல் செல்ல
எனக்கூட்டுக. அனைத்தும் என்பதை ஒருமையாக்கி வலியது என்றார். (21)
கயபதி யாதி யாய வடபுலக் காவல் வேந்தர்
புயவலி யடங்க வென்று புழைக்கைமான் புரவி மான்றேர்
பயன்மதி நுதல்வே லுண்கட் பாவைய ராய மோடு
நயமலி திறையுங் கொண்டு திசையின்மே னாட்டம் வைத்தாள். |
(இ
- ள்.) கயபதி ஆதி ஆய - கயபதி முதலாகிய, வடபுலக் காவல்
வேந்தர் - வடநாட்டைக் காக்கும் மன்னர்களின், புயவலி அடங்க வென்று -
தோள்வலி கெடுமாறு (அவர்களை) வென்று, புழைக்கை மான் -
தொளையினையுடைய கையையுடைய யானைகளையும், புரவி -
குதிரைகளையும், மான்தேர் - குதிரைகள் பூட்டிய தேர்களையும், பயல் மதி
நுதல் - அரைமதியை ஒத்த நெற்றியையும், வேல் உண்கண் - வேலை
யொத்த மையுண்ட கண்களையுமுடைய, பாவையர் ஆயமோடு மகளிர்
கூட்டத்துடன், நயம் மலி திறையும் கொண்டு நலம் நிறைந்த திறைப்
பொருளையும் ஏற்றுக்கொண்டு, திசையின்மேல் நாட்டம் வைத்ததாள் -
திசை காப்பாளர்மேல் போருக்கு எழ எண்ணினார் எ - று.
கயபதி
- கஜபதிகள் : வடநாட்டி லாண்ட ஓர் அரச வமிசத்தினர்;
யானைமிக்குடையானெனப் பொதுப் பெயருமாம். பயல் : பையல் என்பதன்
மரூஉவாகக் கொண்டு, குழவி மதியென உரைத்தல் வேண்டும்; அமுதமாகிய
பயனுமாம். திறையும் என்றமையால் மேற் சொல்லியன கவர்ந்தவை. (22)
பவார்கழல்
வலவன் றேரை வலியகா லுதைப்ப முந்நீர்
ஊர்கல னொப்பத் தூண்ட வும்பர்கோ னனிகத் தெய்திப்
போர்விளை யாடு முன்னர்ப் புரந்தரன் மிலைந்த தும்பைத்
தார்விழ வாற்றல் சிந்தத் தருக்கழிந் தகன்று போனான. |
(பா
- ம்.) * வலியவாக்கித்.
|