I


358திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) வலிய கால் உதைப்ப - பலிய காற்றானது தள்ள, முந் நீர்
ஊர்கலன் ஒப்ப - கடலில் விரைந்து செல்லும் கப்பலை ஒக்க, வார் கழல்
வலவன் - நீண்ட வீரகண்டையை யணிந்த தேர்ப்பாகன், தேரைத் தூண்ட -
தேரினைச் செலுத்த, உம்பர்கோன் அனிகத்து எய்தி - தேவர்க் கரசனின்
படையை அடைந்து, போர் விளையாடு முன்னர் - போரினைத் தொடங்கு
முன்னரே, புரந்தரன் - இந்திரனானவன், மிலைந்த தும்பைத் தார்விழ - தான்
அணிந்த தும்பை மாலையானது விழவும், ஆற்றல் சிந்த - வலிமை கெடவும்,
தருக்கு அழிந்து அகன்று போனான் - (போரின் கண் உள்ள) மனவெழுச்சி
கெட்டுப் போர்க் களத்தி னின்றும் நீங்கனான் எ - று.

     விளையாடுதல் என்றார் எளிதாகச் செய்தல் நோக்கி. தும்பை : தம்
வலி காட்டுதலே பொருளாகச் சென்றும் எதிர்த்தும் பொருதல்; இதற்குத்
தும்பை மாலை சூடுவர். (23)

இழையிடை நுழையா வண்ண மிடையிற வீங்கு கொங்கைக்
குழையிடை நடந்துமீளுங் கொலைக்கணார் குழுவுந் தான
மழைகவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவுங் கோவுந்
தழைகதிர் மணியுந் தெய்வ தருக்களுங் கவர்ந்து மீண்டாள்*.

     (இ - ள்.) இடை இற - இடை ஒடியுமாறு, இழை இடை நுழையா
வண்ணம் வீங்கு கொங்கை - நூல் இடையிற் புகாத வண்ணம் பருத்த
கொங்ககளையும், குழை இடை நடந்து மீளும் கொலைக்கணார் குழுவும் -
செவி வரையிற் சென்று திரும்பும் வருத்துதலையுடைய கண்களையுமுடைய
மகளிர் கூட்டமும், மழை தானம் கவிழ் கடாத்து வெள்ளை வாரணம் மாவும்
- முகில் போலும் மதத்தைக் கொட்டுகின்ற சுவட்டினையுடைய வெள்ளை
யானையும் குதிரையும், கோவும் - காம தேனுவும், தழை கதிர் மணியும் -
தழைந்த ஒளியினையுடைய சிந்தாமணியும், தெய்வ தருக்களும் - தெய்வத்
தன்மையையுடைய கற்பக முதலிய தருக்களுமாகிய இவைகளை, கவர்ந்து
மீண்டாள் - பற்றிக் கொண்டு திரும்பினார் எ - று.

     கொங்கை யென்பது கண்ணார் என்பதன் விகுதியோ டியையும். தான
மென முன் வந்தமையின் கடாம் என்றதற்குச் சுவடு என உரைக்கப்பட்டது.
வாரணமும் என விரித்து. வெள்ளையை மாவோடுங் கூட்டுக. வாரணம் :
ஐராவத மென்னும் யானை. மா - உச்சைச் சிவர மென்னும் குதிரை. (24)

[கலிநிலைத்துறை]
இவ்வாறு மற்றைத் திசைகாவலர்+யாரை யும்போய்த்
தெவ்வாண்மை சிந்தச் செருச்செய்து திறையுங் கைக்கொண்
டவ்வாறு வெல்வா ளெனமூன்றர ணட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள்.

     (இ - ள்.) இவ்வாறு - இவ்வண்ணமே, மற்ற திசை காவலர் யாரையும்
- ஏனைய திசைகாப்பாளர்களனைவரையும், போய் - அத்திக்குகளிற் சென்று,



     (பா - ம்.) * கொண்டு மீண்டாள். +திசைக்காவலர்.