I


திருமணப் படலம்359



தெவ் ஆண்மை சிந்த செரு செய்து - பகைவரின் வீரங் கெடுமாறு போர்
செய்து, திறையும் கைக்கொண்டு - (அவர்கள் பணிந்து தந்த) திறைப்
பொருளையும் ஏற்றுக்கொண்டு, அவ்வாறு வெல்வாள் என - அங்ஙனமே
வெல்ல வென்று, மூன்று அரண் அட்ட வார் மேருச்சிலைக் கையான் -
மும் மதிலையும் அழித்த நீண்ட மேருமலை யாகிய வில்லைக் கையிலுடைய
சிவபெருமானது, கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள் - திருக் கயிலாய
மலையை நோக்கிச் செல்வாராயினர் எ - று.

     மற்றைத் திசை காவலர் - அங்கி, இயமன், நிருதி, வருணன், வாயு,
குபேரன் ஈசானன் என்போர். யாவரையும் செருச் செய்து எனவும், வார்
மேருச்சிலைக் கையான் எனவும் இயைக்க. தெவ் - பகை; தெவ் ஆண்மை
- போர் வீரம் எனினுமாம். (25)

சலிக்கம் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டேர்
வலிக்கும் பரிமள் ளர்வழங்கொலி வாங்கி நேரே
ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.

     (இ - ள்.) சலிக்கும் புரவுத் தடம் தேர் உடைத் தம்பிராட்டி -
செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப்
பிராட்டியார், கலிக்கும் பல தூரியம் - ஒலிக்கின்ற பல இயங்களின்
ஒலியையும், கைவரை - யானைகளும், தெய்வத் திண்தேர் - தெய்வத்
தன்மையையுடைய வலிய தேர்களும், வலிக்கும் பரி - கருத்தறிந்து செல்லும்
குதிரைகளும், மள்ளர் - வீரர்களும், வழங்கு ஒலி - செல்கின்ற ஒலியையும்
வாங்கி நேரே ஒலிக்கும்படி - ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு,
ஊழி தோறு ஓங்கும் ஓங்கல் கிட்டினள் - ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற
கயிலை மலையை அடைந்தார் எ - று.

     தூரியம் அதன் ஒலிக்காயிற்று; தூரியமும் நால்வகைச் சேனையும்
ஒலிக்கின்ற வொலி யென்னலுமாம். வலித்தல் - கருதுதல். ஓங்கல்வாங்கி
எதிரொலி செய்ய. ஊழி தோறும் ஓங்குதலை.

"ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே"

என்னும் ஆளுடைய நம்பிகள் தேவாரத்தா னறிக; முன்னரும்
உரைக்கப்பெற்றது. (26)

வானார் கயிலை மலையான்மக டன்னை நீத்துப்
போனாள்வந் தாளென் றருவிக்கட் புனலுக் கந்நீர்
ஆனா வொலியா லனைவாவென் றழைஇத்தன் றேசு
தானா நகையாற்* றழீஇயெதி ரேற்பச் சென்றாள்.

     (இ - ள்.) வான் ஆர் கயிலை - வானுலகைப் பொருந்திய திருக்
கயிலை மலையானது, மலையாள் மகன் தன்னை நீத்துப் போனாள் - மலை
யரசன் புதல்வியாகிய பார்வதிதேவியார் (அன்று) தன்னை நீங்ககிப்
போயினவர், வந்தாள் என்று - (இன்று) வந்தனர் என்று, அருவிக்கண் புனல்
உக்கு - அருவியாகிய கண்ணீரைச் சிந்தி, அந்நீர் ஆனா ஒலியால்


     (பா - ம்.) * தானானகையால்.