ஒழுகுமாறுபோல, தடவரை
முகடு தொடுத்து வீழவன - பெரிய மலையின்
உச்சியினின்றும் வீழ்வன எ - று.
மேகலை, ஈண்டு ஆடை. பார்மகள்
கொங்கை யென்பதனை,
மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை, அணிமுலைத் துயல்வரூஉ
மாரம்போலச், செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்று என்னும் சிறுபாண்
அடிகளிற் காண்க. சொரிய என ஒருசொல் வருவிக்கப் பட்டது. (6)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
கருநிற மேக
மென்னுங்
கச்சணி
சிகரக் கொங்கை
அருவியாந் தீம்பால் சோர
வகன்சுனை
யென்னுங கொப்பூழ்ப்
பொருவில்வே யென்னு மென்றோட்
பொதியமாஞ்
சைலப் பாவை
பெருகுதண் பொருநை யென்னும்
பண்மகப்
பெற்றா ளன்றே. |
(இ - ள்.) அகன்சுனை என்னும் கொப்பூழ்
- அகன்ற சுனையாகிய
கொப்பூழினையும், பொருஇல் - ஒப்பில்லாத, வேய் என்னும் மென் தோள்
- மூங்கிலாகிய மெல்லிய தோளினையுமுடைய, பொதியம் ஆம் சைலப்
பாவை - பொதியமாகிய மலைமடந்தையானவள், கருநிறமேகம் என்னும்
கச்சு அணி - கரிய நிறத்தினையுடைய மேகமாகிய கச்சினை யணிந்த,
சிகரக்கொங்கை - சிகரமாகிய கொங்கையினின்றும், அருவி யாம் தீம்பால்
சோர - அருவியாகிய மதுரம்பொருந்திய பால் ஒழுக, பெருகுதண் பொருநை
என்னும் பெண்மகப் பெற்றாள் - பெருநகர நின்ற குளிர்ந்த தாமிரபன்னி
யாகிய பெண்மகவை ஈன்றாள் எ - று.
அகன்சுனை, புறனடையான் முடிக்க.
பொதியில் என்பது பொதியம்
எனவும் பொதிகை யெனவும் வடமொழியிற்சென்று திரிந்துவழங்கும். அன்று
ஏ, அசை. இயைபுருவகம். (7)
கல்லெனக்
கரைந்து வீழுங்
கடும்புனற் குழவி கானத்
தொல்லெனத் தவழ்ந்து தீம்பா
லுண்டொரீஇத் திண்டோள் மள்ளர்
செல்லெனத் தெழிக்கும் பம்பைத்
தீங்குரல் செவியாய்த் தேக்கி
மெல்லெனக் காலிற் போகிப்
பணைதொறும் விளையாட் டெய்தி. |
(இ
- ள்.)
கல்லெனக் கரைந்து வீழும் - கல் என்று ஒலித்து வீழும்,
கடும்புனல் குழவி - கடிய வேகத்தினையுடைய பொருநைநீராகிய குழந்தை,
|